சென்னையில் இருந்து மதுரை வந்த எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ,உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் தொண்டர்களுடன் திரளாக திரண்டு இருந்தனர் .
அப்போது விமான நிலைய வளாகத்தில் பயணிகள் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் அதிமுக சார்பில் முன்னாள் எடப்பாடி பழனிசாமி வரவேற்க ராஜன் செல்லப்பா எம்எல்ஏ, செல்லூர் ராஜு ஆகியோர் திடீர் மேடை அமைத்து தொண்டர்களுடன் வரவேற்பு அளித்தனர்.
அதிமுகவினர் விமான நிலையத்தில் அனுமதியின்றி மேடை அமைக்கப்பட்டது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. மதுரை விமான நிலையத்தில் வரும் முக்கிய பிரமுகர்களை வரவேற்க அந்தந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரடியாக நின்று வரவேற்று அனுப்பி விடுவது வழக்கம்.
ஆனால், முதல் முறையாக அதிமுகவினர் சர்ச்சைக்குரிய வகையில் திடீர் மேடை அமைத்து வரவேற்பளித்தனர், மேடை அமைப்பது குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் எந்தவித அனுமதி பெறாமல் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுட வழிவகுக்கும்.
இனி வரும் காலங்களில், அரசியல் கட்சிகள் இதுபோல் நடவடிக்கையில் ஈடுபட்டால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும். ஒரே நேரத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமானத்தில் வரும் சூழ்நிலையில் இது போன்ற இரு அரசியல் கட்சிகள் விமான நிலையத்தில் மேடை அமைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கூறப்படுகிறது, இது குறித்து, காவல்துறையினரிடம் விசாரித்தபோது, விமான நிலைபஅதிகாரிகள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம் என கூறினர்.
No comments:
Post a Comment