மதுரையில் பாகுபலி, KGF படப்பாணியில் ராஜமரியாதையோடு நடைபெற்ற "சர்வதேச வாசவி கிளப்" நிர்வாக இயக்குனரின் பணி நிறைவு விழா.
குத்தாட்டம் போட்டு மேடைக்கு அழைத்து வந்த உறுப்பினர்கள்.
மதுரை தமுக்கம் மைதான கூட்டரங்கில் வைத்து சர்வதேச வாசவி கிளப் -ன் 2024ம் ஆண்டு கவர்னராக ரவிச்சந்திரனின் பொறுப்பேற்று இன்று பணி நிறைவு விழா நடைப்பெற்றது.
அனைத்து வைசியர் சமூகத்தையும் ஒரு பொதுவான தளத்திற்கு கொண்டுவந்து, அவர்கள் தங்கள் கருத்துக்களையும் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கும், அன்றைய காலத்தில் ஐஏஎஸ் மற்றும் டாக்டர், பொறியாளர் மற்றும் வக்கீல்களாக உள்ள ஆர்ய வைசியர்களை கவுரவிப்பதற்கும் ஒரு தேவை வலுவாக உணரப்பட்டது.
இதற்காக 1961 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி வாசவி கிளப் 11 உறுப்பினர்களுடன் ஹைதராபாதில் ஸ்தாபகராக மட்டுமின்றி, சுதந்திரப் போராளியாகவும் கருதப்படக்கூடிய சுதந்திரப் போராட்ட வீரர் மறைந்த ஸ்ரீ கல்வகுந்த்லா சந்திரசேன குப்தா (கே.சி.குப்தா) அவர்களால் தொடங்கப்பட்டது.
தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய ஆர்ய வைஸ்யாவைச் சேர்ந்த 5000ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை உள்ளடங்கிய கிளப் தான் இன்டர்நேசனல் வாசவி கிளப்.
இந்த கிளப்பில் முதல் முறையாக மதுரையை சேர்ந்த ரவிச்சந்திரன் இந்த சங்கத்தின் 2024ம் ஆண்டு சர்வதேச ஜனாதிபதியாக பதவி ஏற்று ஒரு வருடம் நிறைவு பெற்று இன்று அவருக்கு பணி நிறைவு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கார்நாடகா உளள்இடட் மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.
இந்த விழாவில் விழாவின் நாயகன் ஜனாதிபதியாக உள்ள ரவிச்சந்திரனை பாகுபலி மற்றும் கேஜிஎப் படப்பாணியில் சிம்மாசனத்தில் அமர வைத்து மேளதாளங்கள் முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் ராஜமரியாதையோடு நிர்வாகிகள் மேடைக்கு அழைத்து வந்தனர்.
குத்து விளக்கேற்றி விழா துவங்கிய நிலையில் விழா மேடையில் ஏழை மாணவர்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் KCGF நிதி உதவி, நோட்டுப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய வாசவியர்களின் குடும்பங்களுக்கு சுயவேலை வாய்ப்புக் கடன் வழங்கியது குறித்தும் பேசினார். தொடர்ந்து பணி நிறைவு பெறும் கவர்னருக்கு ஆளுயுர மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கவுரவம் படுத்தினர்.
பணி நிறைவு விழாவை கே ஜி எஃப் மற்றும் பாகுபலி படம்போல் சங்க நிர்வாகிகள் கொண்டாடியது மதுரை மக்களிடையே வியப்படையச் செய்தது.
No comments:
Post a Comment