மதுரையில் டியூஷன் சென்ற பள்ளி மாணவர்களை சுற்றி வளைத்த தெரு நாய்கள்.
அதிஷ்டவசமாக தப்பிய சிறுவர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு.
மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 70 வது வார்டு நேரு நகர் நேதாஜி மெயின் ரோட்டில் இன்று அதிகாலையில் இரண்டு சிறுவர்கள் டியூஷன் செல்வதற்காக நேரு நகர் நேதாஜி மெயின் ரோடு பகுதியில் சைக்கிள் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களை குறுக்கிட்ட மூன்று நாய்கள் வழி மறித்து குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து நிலைமையில் உணர்ந்த சிறுவர்கள் அங்கிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பி ஓடி யுள்ளனர். குறிப்பாக நாளுக்கு நாள் மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. தினசரி 50க்கும் மேற்பட்டோர் நாய் கடிக்காக அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக வந்து செல்கின்றன. மாநகராட்சி பகுதிகளில் முறையாக நாய்கள் பெருக்கத்தை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment