திருமங்கலம் நகர் மன்ற கூட்டத்தில் குடிநீர் குழாய் இணைப்புகள், மழைகாலத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் நிவாரண பணிகள் நடத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் மாதாந்திர நகர் மன்ற கூட்டம் ரம்யா முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒவ்வொரு வார்டுகளில் மழைக்காலத்தில் நிவாரண பணிகள், தார் சாலை வசதிகள் கழிவுநீர் வாய்க்கால் சரிசெய்தல் மேலும் புதிய குடிநீர் குழாய் இணைப்புக்கு கட்டணங்கள் குறைக்கப்பட்டது. 15ஆயிரம்மாக இருந்த கட்டணம் 5ஆயிரமாக குறைக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் துணை தலைவர் ஆதவன் அதியமான்,நகர பொருளாளர் சின்னசாமி மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment