மது போதையில் அரசு பேருந்து நடத்துனர் கட்டு கட்டாய் பயணிகளுக்கு வழங்க வேண்டிய பஸ் டிக்கெட் உடன் சாலையில் மயங்கிய நிலையில்
மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் பிரதான சாலையில் இரவு 9 மணி அளவில் காக்கி சட்டை பேண்ட் உடன் தள்ளாடியபடியே ஒருவர் வந்து கொண்டிருந்தார் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தது பின்பகுதியில் தலையில் காயம் ஏற்பட்டது உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை ஓரமாக அமர வைத்து பார்த்தபோது கடுமையான மது போதையில் இருந்தது தெரிய வந்தது உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை சோதித்த போது அவர் கையில் ஒரு பட்டன் செல் இருந்தது டயல் லிஸ்ட் வைத்து ஒவ்வொருவருக்காக போன் செய்தபோது அவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை பொன்மேனி கிளையில் நடத்துனராக பணியாற்றி வருவது தெரிய வந்தது டிப்போ மேலாளர் சார் அவர் கையில் பையும் ஏதும் உள்ளதா என கேட்டார் ஆம் என்று சொன்னோம் பத்திரமாக எடுத்து வையுங்கள் சார் அதில் உள்ளே டிக்கெட் அதிக அளவு உள்ளது எனவும் தெரிவித்தார் உடனடியாக அவர் வைத்திருந்த கையை அப்பகுதி மக்கள் அருகே உள்ள கடையில் பத்திரமாக வைத்தனர் பொன்மேனி டிப்போ இருந்து ஓட்டுனர் ஒருவர் அங்கு வந்தார் அப்பொழுது அவர் வைத்திருந்த பை எங்க சார் என்று கேட்டார் உடனடியாக அந்த பையை எடுத்துக் கொடுத்த போது அதன் கட்டுக்கட்டாக காலை ஐந்து முப்பது மணி அளவில் பேருந்தில் நடத்துனராக பணியாற்ற வேண்டிய அவருக்கு டிக்கெட் இன்று இரவே வழங்கப்பட்டுள்ளது பல ஆயிரம் மதிப்புள்ள டிக்கெட்டுகள் அந்த பையில் இருந்ததை கண்டு அதிர்ந்த பகுதி மக்கள் எப்படி இவர் கையில் இதை நீங்கள் கொடுத்தீர்கள் எனவும் முதல் நாள் அனைத்து நடத்துனர் கைகளும் கொடுத்து விடுவீர்களா என அவரிடம் கேட்டபோது சார் எங்களுக்கு எதுவும் தெரியாது எனவும் இவர் இப்படி செய்வார் என்று எங்களுக்கு தெரியாது எனவும் நல்ல வேலையாக பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பயணிகளுக்கு வழங்க வேண்டிய பஸ் டிக்கெட்டுகள் தப்பியது இல்லை என்றால் நீங்கள் வேலை காலியாகிவிடும் என தெரிவித்தார் இது போன்ற நபர்களிடம் ஏன் முதல் நாட்களை டிப்போ மேலாளர்கள் டிக்கெட் கட்டுகளை கையில் கொடுக்கிறார்கள் எனக் கூறவில்லை அடுத்த நாள் காலை பணிக்கு வரும்போது 20 நிமிடம் முன்பாக வந்தாவது டிக்கெட்டை பெற்றுக் கொண்டு பணியில் கொண்டு செல்லலாம் தற்பொழுது பொதுமக்கள் அதிகம் உள்ள பகுதியில் இவர் கீழே விழுந்தது பிரச்சனை இல்லை நாளை வேறெங்காவது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கீழே விழுந்து டிக்கெட்டுகளை தொலைத்தால் யார் பொறுப்பேற்பது என பொதுமக்கள் நொந்து போனனர் இது போன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் சம்பந்தப்பட்ட டிப்போ மேலாளர் முதல் நாளை டிக்கெட் வழங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
No comments:
Post a Comment