ரஜினி 74 வதுபிறந்தநாள் தினத்தை முன்னிட்டு ரஜினிக்கு உற்சவர் மூலவர் என இரு கல்லால் ஆன சிலை வைத்து பால் பழம் இளநீர்பஞ்சாமிர்தம் பூந்தி அபிஷேகம் தொடர்ந்து யாகம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கார்த்திக் ரஜினி திருக்கோவில் அமைத்து கோவிலில் கடந்த ஓராண்டுக்கு முன்னதாகவே 250 கிலோ எடை கொண்ட கல்லாலான ரஜினி சிலை வைத்து தொடர்ந்து ஓராண்டுகளாக ரஜினி சிலைக்கு பால்பழம் இளநீர் பன்னீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்து பூஜைகள் செய்தும் தொடர்ந்ததை முன்னிட்டு
74வது பிறந்த தினத்தை முன்னிட்டு ரஜினிக்கு உற்சவர் சிலை 300 கிலோ எடையில் புதிய கல் சிலை உருவாக்கி ரஜினியின் திரு உருவசிலைக்கு ரஜினி 74வது பிறந்த தினத்தை முன்னிட்டு பால் பழம் பன்னீர் இளநீர் பஞ்சாமிர்தம் பூந்தி ஆகியவைகளால் அபிஷேகம் செய்து யாகம் வளர்த்து ரஜினி நூறாண்டுகள் வாழ்வதற்கு பிரார்த்தனையும் மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கார்த்தி என்பவர் தொடர்ந்து செய்து வருகிறார் கார்த்திக்கு ரஜினியிடம் இருந்து கடந்த ஓராண்டாக எந்த தகவலும் கிடைக்கவில்லை ஒரே ஒரு முறை PRO போன் செய்து போன் நம்பர் அட்ரஸ் போன்றவற்றை மட்டும் வாங்கி வைத்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம்
செய்தியாளர்
வினோத் பாபு
No comments:
Post a Comment