அரசு பேருந்து பிரேக் பிடிக்காத நிலையில் பாலத்தில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்து - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 18 November 2024

அரசு பேருந்து பிரேக் பிடிக்காத நிலையில் பாலத்தில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்து


 மதுரை புறநகர் பகுதியில் இருந்து மாநகர் பகுதிக்கு வருகை தந்த அரசு பேருந்து பிரேக் பிடிக்காத நிலையில் பாலத்தில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்து அடுத்தடுத்து மோதிய விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பொதுமக்கள்.


மதுரை மாநகர் பகுதியான பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து நாள் ஒன்றுக்கு புறநகர் பகுதி மற்றும் மாநகர் பகுதி என 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது குறிப்பாக மாட்டுத்தாவணி ஆரப்பாளையம் உசிலம்பட்டி செக்கானூரணி வாடிப்பட்டி திருமங்கலம் காரியாபட்டி சிலைமான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கிராமப்புற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.


இந்த நிலையில் மதுரை தென் பலஞ்சி பகுதியில் இருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கு பயனர்களுடன் வந்த அரசு பேருந்து எல்லிஸ் நகர் மேம்பாலத்தில் இன்று காலை பேருந்து நிலையத்திற்குள் நுழைவதற்கு இறங்கிய போது பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக பேருந்து ஓடியது.


இதனால் பாலத்தில் பக்கவாட்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தி தொடர்ந்து நிற்காமல் சென்றதால் அப்பகுதியில் சிமெண்ட் தடுப்பின் மீது மோதி பேருந்து நின்றது நல்வாய்ப்பாக பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரிக்கு செல்பவர்கள் வேலைக்குச் செல்பவர்கள் என யாருக்கும் எவ்வித காயமும் இல்லாமல் உயிர் தப்பினர் மேலும் இது போன்ற காலாவதியான பழுதடைந்த அரசு பேருந்துகளை தொடர்ந்து இயக்குவதால் அடிக்கடி விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவதாக பொதுமக்களும் பேருந்து பயணிகளும் குற்றம் சாட்டுகின்றனர்.


இதேபோல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதே எல்லிஸ் நகர் பாலத்தில் உசிலம்பட்டியில் இருந்து மதுரைக்கு வந்த அரசு பேருந்தும் பிரேக் பிடிக்காமல் அடுத்தடுத்து தடுப்புகள் மீதும் மோதி சாலையில் பயணித்த நபர் ஒருவர் மீது ஏறி இறங்கியதில் அவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad