கார்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெற்றது.
கார்த்திகை மாதம் பிறந்துவிட்டால் அனைத்து சிவாலயங்களில் சோமவாரம் திங்கட்கிழமைகளில் வலம்புரி சங்குகள் மூலம் சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.அதன்படி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் 108சங்குகள்வைத்து புனித நீர் ஊற்றி சிவபெருமானுக்கு அபிசேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை தரிசித்து சென்றனர். நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment