ஓய்வு ஊதியர்களின் கோரிக்கைகளுக்கான துறையாக இருந்த ஓய்வூதிய இயக்குனரகத்தை தமிழக அரசு கலைத்ததை ஆட்சேபித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் திருமங்கலம் வட்டக்கிளையின் 24-வது பேரவை கூட்டம் இன்று திருமங்கலம் எஸ்.எம்.பி. கல்யாண மஹாலில் நடைபெற்றது! கூட்டத்திற்கு வட்டக்கிளையின் தலைவர் ஜனாப்.கே. மஹபூப்பாட்சா தலைமை தாங்கினார்! பேரவை கூட்டத்திற்கு வருகை தந்தவர்கள் அனைவரையும் துணை தலைவர் பழனிராஜ் வரவேற்றார் செயலாளர் ரகுநாதன் செயலாளர் அறிக்கையையும், பொருளாளர் பாலகிருஷ்ணன், சங்கத்தின் வரவு செலவு ஆண்டறிக்கையையும் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. ஒப்புதல் பெற்றனர் சங்கத்தை வாழ்த்தி ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட மையத்தின் தலைவர் ராமானுஜம், துணை தலைவர் ஜெயராமன், தமிழ் நாடு பணி நிறைவு சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வேலாயுதம்,பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளர் முருகேசன், வாசன் கண் மருத்துவமனை யின் மருத்துவர் கே.கமல்பாபு ஆகியோர் உரையாற்றினார்கள்! ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் திருமேனிநாதன் இயக்க உரையாற்றினார் பேரவைக் கூட்டத்தில் ஓய்வூதியர்களின் கோரிக்கைக்கான துறையாக இயங்கி வந்த ஓய்வூதிய இயக்குனரகம் உள்ளிட்ட மூன்று துறைகளை கலைத்து கருவூல கணக்கு துறையுடன் தமிழக அரசு இனைத்ததை ஆட்சேபித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆளும் கட்சி தேர்தல் அறிக்கையில் ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் 70-வயது நிரம்பியதும் 10 சதவீதமும், 80 வயது நிரம்பியதும் மேலும் 10 சதவீதமும் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று உறுதி அளித்ததை இன்று வரை நிறைவேற்றாததையும் இதை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பணியில் உள்ளவர்கள் இறக்கும் நேர்வில் ரூபாய் ஐந்து லட்சம் வழங்குவது போன்று,குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டத்தில் மாதம் ரூ.150/- செலுத்தும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் இறக்கும் நேர்வில் தற்போது வழங்கும் ஐம்பதாயிரம் ரூபாயை ஒரு லட்சமாக வழங்க தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!
திருமங்கலம் நகரில் வெளியூர் பஸ்கள் நின்று செல்வதற்கு பேருந்து நிலையம் இல்லாததால் தேசிய நெடுஞ்சாலையில் நின்று செல்வதால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடைஞ்சலாக உள்ளது. எனவே திருமங்கலம் நகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து புதிய பேருந்து நிலையம் அமைக்க பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
இன்னோரன்ன தீர்மானங்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்களை சங்கத்தின் இணை செயலாளர் எம்.நடராஜன், அமைப்பு செயலாளர் முருகேசன், செயற்குழு உறுப்பினர்கள் பாண்டி, காசிராஜன் ஆகியோர் முன் மொழிந்தனர். பேரவைக் கூட்டத்தில் சங்க ஆலோசகர் வெங்கிட கிருஷ்ணன், மூத்த உறுப்பினர்கள் வையத்துரை, கன்னையா, நாகலிங்கம், நமசிவாயம் மற்றும் .பிரேமாராணி, பாண்டி செல்வி, ஜெயந்தி மற்றும் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர். விழாவின் நிறைவாக காசிராஜன் நன்றி நவிழ பேரவை கூட்டம் இனிதே நிறைவுற்றது கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் வாசன் கண் மருத்துவமனை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment