திருமங்கலம் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா திருக்கோவிலில் களஆய்வு கூட்டம் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 28 November 2024

திருமங்கலம் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா திருக்கோவிலில் களஆய்வு கூட்டம்

 


சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க


மதுரை புறநகர்  மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருமங்கலம் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா திருக்கோவிலில் களஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர்., ஆர்.பி.உதயகுமார் தலைமையுரையாற்றினார்.  கழக துணை பொது செயலாளர்,முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், மற்றும் முன்னாள் அமைச்சர், செம்மலை,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தண்டரை மனோகரன் ஆகியோர் கள ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினர் . இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்,I.மகேந்திரன் கே.மாணிக்கம் கே.தமிழரசன் எஸ்.எஸ்.சரவணன் கே.தவசி  கருப்பையா .பா.நீதிபதி மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன் கண்ணன் ராமையா ,பிரபு சங்கர் திரு.ராமசாமி .MVP.ராஜா,பிச்சை ராஜன் காளிதாஸ்.ரவிச்சந்திரன் கொரியர் கணேசன் ராதாகிருஷ்ணன் நகர் கழகச் செயலாளர் .பூமா.கே.ராஜா J.D.விஜயன் மற்றும் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் மாவட்ட கழக பொருளாளர் திருப்பதி அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் அம்மா பேரவை துணைச் செயலாளர்கள் பா.வெற்றிவேல் துரை தனராஜன்  ராஜேஷ் கண்ணா கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் சிவசுப்பிரமணியன்  மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பாவாடையான் சுதாகரன்
சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் தமிழழகன் பாஸ்கரன் மகேந்திர பாண்டி கபிகாசிமாயன்
ராமகிருஷ்ணன்  சிங்கராஜபாண்டியன் சதீஷ் சண்முகம் சரவணபாண்டி துரைப்பாண்டி சிவசக்தி மற்றும் கழக நிர்வாகிகள் பெருந்திரளானோர்  கலந்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் செம்மலை கூறுகையில்

இந்த நோட்டை மட்டும் நாங்கள் ஆய்வு செய்துவிட்டு கிளம்பி இருப்போம். ஆனால் உங்கள் ஒவ்வொருவரையும் அழைத்துப் பாராட்ட வேண்டும் என்பதற்காகத்தான் அழைத்து பேசினோம். நமது இலக்கு 2026 பொது தேர்தல்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில்

தமிழகம் முழுவதும் ஜனநாயக ரீதியில் எந்த கட்சியும் நடக்காத அளவில் கள ஆய்வை நடத்தி காட்டியிருக்கிறது.

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறுகையில்.

14 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். பாதி இடங்களில் ஆய்வு பணிகளை முடித்து விட்டோம். இறுதியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என பொதுச்செயலாளர் சொல்லியிருக்கிறார். அந்த வகையில் மதுரை மேற்கு மாவட்டத்தை பொருத்தவரையில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் ஆய்வு செய்துதான் கண்டுபிடிக்க வேண்டும் என அவசியமில்லை. கைப்புள்ளுக்கு கண்ணாடி தேவையில்லை என்பதைப் போல ஆர்.பி.உதயகுமார் இருக்கின்ற பகுதி என்பதால் ஆய்வு செய்ய வேண்டிய தேவையில்லை. எப்படி செய்ய வேண்டும் என கற்றுக்கொண்டு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு ஆய்வு மேற்கொண்டுள்ளோம். இந்த தொகுதியில் வெற்றி வாகை சூடுவதற்கான களப்பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார். ஆர்.பி.உதயகுமாரருக்கு வாழ்த்தவும், பாராட்டவும், நன்றி கூறவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்த ஆய்வில் நாங்கள் தெரிந்து கொண்டது அதிகம், எப்படி செய்ய வேண்டும் என்பதை எடுத்துக் கொண்டு நேரடியாக களத்திற்கு சென்று மேற்பார்வை செய்வோம். இந்த ஆய்வின் நோக்கம் உறுப்பினர் சேர்க்கை சரிபார்ப்பு மட்டுமில்லாமல் கழகத்தில் அமைப்பு ரீதியாக சில மாற்றங்களை செய்ய வேண்டும் என பொதுச் செயலாளர் உத்தரவிட்டிருக்கிறார்
கழகத்திற்கான பணிகளை சிறப்பாக செய்து முடித்தால் நமது வெற்றியை எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது என கூறினார்.

இறுதியாக செய்தியாளர்களை சந்தித்தால் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில்.

234 சட்டமன்ற தொகுதிகளிலும் அம்மாவின் பயிற்சி பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள் தலைமையில் கள ஆய்வு நடைபெறுகிறது. உறுப்பினர் சீட்டு முழுமையாக சென்றடைந்துள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். மேற்கு மாவட்டம் நூத்துக்கு நூறு எடுத்து பாஸ் என மதிப்பெண் வழங்கி இருக்கிறார்கள்.

ஒன்பது பேர் கொண்ட குழுவாக வாக்குச்சாவடி கிளை கழகம் அமைக்க வேண்டும் என எடப்பாடியார் உத்தரவிட்டுள்ளார்.

எம்ஜிஆர் மற்றும் ஜானகி அம்மையாரின் நூற்றாண்டு விழாவை போல புரட்சித்தலைவி அம்மாவின் நூற்றாண்டு விழாவையும் முதலமைச்சராக நடத்தக்கூடிய காலம் வரும்.

தேர்தல் பணி துவங்கியது குறித்து துணை முதல்வர் பேசியது குறித்த கேள்விக்கு

அந்தக் கட்சியில் வாய் போட்டு சட்டம் போடப்பட்டுள்ளது. அப்பா அல்லது மகன் மட்டும்தான் பேசுவார்கள்.

கூட்டணி இல்லாமல் அதிமுகவில் வெல்ல முடியாது என கம்யூனிஸ்ட் கூறியது குறித்த கேள்விக்கு.

தேர்தலுக்கு இன்னும் ஒன்னரை ஆண்டு காலம் உள்ளது கட்டமைப்பை வலிமைப்படுத்துகிற பணியில் உள்ளோம்.

கள ஆய்வுக் கூட்டத்தில் சலசலப்பு குறித்த கேள்விக்கு.

கருத்து மோதல் இருந்தால் அங்கு ஜனநாயகம் உள்ளது என அர்த்தம். இதைவிட பெரிய கருத்து முதலில் நடந்துள்ளது தூக்கி take it easy ஆக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ராமதாசுக்கு வேலையில்லை என முதல்வர் கூறியது குறித்த கேள்விக்கு.

அவர் ஆணவத்தின் உச்சிக்கு சென்று விட்டார். அனைவரையும் வேலை இல்லை என்று தான் பேசுகிறார், அவருக்கு தான் வேலை இல்லை. அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் தான் அவருக்கு எல்லாம் புரியும். அதனால் தான் எதிர்க்கட்சித் தலைவர் பரிசை அவருக்கு அளிப்போம் என அரசு ஊழியர்கள் கூறினர்.

இன்று மட்டும் அதிமுக சார்பாக மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் பகுதியில் இந்த கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏற்கனவே காலை செல்லூர் ராஜு மற்றும் மதியம் ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டங்களில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் திருமங்கலத்தில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டம் மட்டும் அமைதியாக நடைபெற்று முடிந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad