திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர்களின் கடைசி கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் கடைசி கூட்டம் நேற்று ஒன்றிய குழு தலைவர் லதா ஜெகன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் வளர்மதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கீதா ,சந்திர கலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கிய முதல் சத்துணவு பஞ்சாயத்து செயளர் அழகு பாண்டி இறந்ததால் அவருக்காக அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிராமங்களில் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் பரவாமல் தடுப்பதற்கு மூன்று ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளுக்கு குளோரின் பவுடர் பயன்படுத்துவதில்லை அதனை மழைக்காலத்தில் ஆவது பயன்படுத்த வேண்டும் பள்ளிகளில் 5.5 லட்சம் செலவில் சுகாதாரப் பணிகள் மேற்கொண்டதாக அதிகாரிகள் கணக்கு எழுதி உள்ளனர் என்னென்ன செயல்பாடுகள் நடந்தது என்பது குறித்து விளக்க வேண்டும் பள்ளிகளில் கழிப்பறை உட்பட எதுவும் சுகாதாரமாக இல்லை என்று பாஜக ஒன்றிய கவுன்சிலர் ஓம் ஸ்ரீ முருகன் கூறினார். செக்கானூரணி ஆரம்ப சுகாதார நிலையம் மதுரை தேனி நெடுஞ்சாலையில் இருப்பார் அதை அவசர சிகிச்சை மையமாக மாற்ற வேண்டும் என்றார் சாத்தங்குடி ஊராட்சி புலியூரில் குளியல் தொட்டிகள் பணி முடிந்து ஆறு மாதம் ஆகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை அதை உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர் ஒன்றிய கூட்டத்தின் கடைசி கவுன்சிலர் கூட்டம் என்பதால் அனைவரும் குழுவாக போட்டோ எடுத்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment