திருமங்கலம் அரசு மருத்துவமனையில் புதிதாக சலவை இயந்திரம் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளில் 100 க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்கள் பயன்படுத்திய படுக்கை விரிப்புகளை சம்பந்தப்பட்ட பணியாளர்கள் செய்து வந்தனர்.அவர்கள் விடுப்பில் சென்றுள்ளதால் படுக்கை விரிப்புகள் மாற்றாமல் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.இதனை அடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருப்பது போல் திருமங்கலத்திலும் சலவை இயந்திரம் வாங்க முடிவு செய்யப்பட்டு சமூக சேவகரும் முன்னாள் நகர் மன்ற உறுப்பினருமான ஜாகிர் உசேன் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு ரூ ஆறு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சலவை இயந்திரம் வழங்கினார். 50 கிலோ கொள்ளளவு கொண்ட துணிகளை சலவை செய்யலாம். இந்நிகழ்ச்சியில் திருமங்கலம் நகர்மன்ற உறுப்பினர் ரம்ஜான் பேகம் திருமங்கலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராம்குமார் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஜாகிர் உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment