மதுரை விமான நிலையத்திற்கு விரிவாக்கம் செய்ய சின்ன உடைப்பு பகுதியில் நிலம் கையகப்படுத்தட்டது. அதற்கு மாற்றாக தங்களுக்கு தமிழக அரசு வீடு கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சின்ன உடைப்பு பகுதியில் விமான நிலைய விரிவாக்கத்திற்காக விளைநிலம் ,வீடு, கோவில், மயானம் உள்ளிட்ட அனைத்தையும் அரசு எடுத்துக் கொண்டது.
அதற்கு மாற்றாக அவர்களுக்கு வேறு இடம் ஒதுக்கி தந்த நிலையில் தற்போது தங்களுக்கு குடிபுக வீடு கட்டி தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சின்ன உடைப்பு கிராம மக்கள் மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் .
இதில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 250 பேர் கலந்து கொண்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சின்ன உடைப்பு கிராம நாட்டாமை மலைராஜன் தலைமை வகித்தார்
மதுரை மாமன்ற உறுப்பினர் முத்துலட்சுமி அய்யனார்,மதுரை வீரன் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காலை 10 மணி முதல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment