திருமங்கலத்தை அடுத்த குண்ணத்தூரில் அதிமுக சார்பில் இளைஞர்களுக்கு பயிற்சி பட்டறை கொடுத்த எதிர்கட்சி துணைத் தலைவர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 7 October 2024

திருமங்கலத்தை அடுத்த குண்ணத்தூரில் அதிமுக சார்பில் இளைஞர்களுக்கு பயிற்சி பட்டறை கொடுத்த எதிர்கட்சி துணைத் தலைவர்.


திருமங்கலத்தை அடுத்த குண்ணத்தூரில் அதிமுக சார்பில் இளைஞர்களுக்கு பயிற்சி பட்டறை கொடுத்த எதிர்கட்சி துணைத் தலைவர்.



ஆளூம் கட்சி திமுகவை கண்டித்து வருகின்ற 9ம்தேதி அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவதை முன்னிட்டு இளைஞர்களுக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் பயிற்சி சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.இதில் அனைத்து ஒன்றியங்களில் இருந்து இளைஞர்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர்.திமுக அரசு ஆட்சி அமைத்து நான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில் இளைஞர்கள் போதைப்பொருள் புழக்கம் நிறைய பாதிக்கப்பட்டு உயிரைக் பலி கொடுக்கின்றனர்.இதை தடுக்க முடியாத திமுக அரசு மக்களுக்கு எந்த ஒரு நல திட்டங்களை கொடுக்க வில்லை.மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட எல்லா நலத்திட்டங்களை தடுத்து நிறுத்திய அரசு திமுக அரசு என்று சிறப்புரையாற்றினார். 

அனைவருக்கும் தினமும் காலையில் இருந்து உணவு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், பேருர்கழக செயலாளர்கள், நகர் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad