மதுரையில் மகாபெரியவர் ஆலயம்.!
திருப்பணியில் பங்கெடுக்க ஆன்மிக அன்பர்களுக்கு அரிய வாய்ப்பு..
கருணைக்கடல் காஞ்சி மகா பெரியவா ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.! கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகப் போற்றப்படுகிறவர். பாரததேசம் முழுதும் புண்ணிய யாத்திரைகள் மேற்கொண்டு முகாமிட்டு அருளாசிகளை வழங்கியவர்.
மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல வைபவங்களுக்காக மதுரைக்கு பலமுறை விஜயம் புரிந்துள்ளார். அவருக்கு மதுரையின் புண்ணிய திருத்தலமான 'வ்ருஷபாத்ரி' எனப்படும் 'திருமாலிருஞ்சோலை' கள்ளழகர் கோயில் மலை அடிவாரத்தில், திருக்கோயிலை அமைக்க இருக்கிறது 'மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம்'.
கள்ளழகர் திருக்கோயிலின் தீர்த்தக்குளம் அமைந்திருக்கக் கூடிய பொய்கைக்கரைப் பட்டியில், இயற்கை எழில் சூழ பொலிவுற அமையவிருக்கிறது இந்தக் கோயில். இதற்கான பூர்வாங்க பணிகள் வெகு விரைவாக தொடங்கப்பட இருக்கின்றன.
மதுரை எஸ்.எஸ்.காலனியில், 'ஸ்ரீகாஞ்சி மகாபெரியவா கிருஹம்' என்னும் கோயிலை நிர்வகித்து நடத்திவரும் 'அனுஷத்தின் அனுக்கிரகம்' நிறுவனர் நெல்லை பாலு அவர்களின் சீரிய முயற்சியில் இந்தக் கோயில் அமையவிருக்கிறது.
இந்தப் புனிதத் திருப்பணியில் ஆன்மிக அன்பர்களும், ஸ்ரீ காஞ்சி மகாபெரியவரின் பக்தர்களும் பங்களிப்பு செய்து அவரது அருளாசியைப் பெறலாம்.
திருப்பணிக்குத் தேவையான பணமாகத் தருவது மட்டுமின்றி கட்டிட தளவாட சாமான்கள், இதர பொருட்களாக வாங்கிக் கொடுத்தும் திருப்பணியில் பங்கெடுக்கலாம் கோயில் அமைவிருக்கிற இடம் மற்றும் அங்குள்ள கட்டுமானத்தைச் சேர்த்து சதுர அடி ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரத்து 500 ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது. அன்பர்கள் சதுரடி வீதமாக 3,500 அல்லது 2 சதுர அடி, 5 சதுர அடி, 10 சதுர அடி என தாங்கும் விரும்பும் அளவுகளில் அதற்கான தொகையினைத் தந்தும் திருப்பணியில் பங்கெடுக்கலாம்.
இந்தக் கோயில் அமைவதற்கான செலவுகள் பல லட்சங்களைத் தொடுவதால், ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் நன்கொடையாகப் பங்களிப்பு செய்யும் கொடையாளர்களின் பெயர்கள் கோயில் கல்வெட்டிலும் பொறிக்கப்பட இருக்கிறது.
அடுத்த ஓராண்டுக்குள் இந்தக் கோயில் கட்டுமானம் பூர்த்தி பெற்று ஸ்ரீஸ்ரீ காஞ்சி மகா பெரியவா சந்திரசேகரேந்திர ஸ்வாமிகளின் அருள் ஆசியோடு கும்பாபிஷேகம் செய்யப்பட இருக்கிறது. *அவரது அருளாசியைப் பெற்ற பக்தர்கள், இந்த திருப்பணியில் பங்கு பெறும் அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள அன்போடு அழைக்கிறோம்.!*
மக்கள் பணியில்..
Rtn.நெல்லை பாலு,
நிறுவனர் - அனுஷத்தின் அனுக்கிரகம்,
G-102, சாந்தி சதன் குடியிருப்பு,
கோச்சடை, மதுரை - 625016
Ct: +91 9442630815
தாங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு 80G வரி விலக்கும் உண்டு.
நன்கொடைகளை அனுப்ப வேண்டிய கணக்கு விவரம் & தொடர்பு எண்:
GPay & Phonepay: +91 9442630815
Ac Details:
Maduraiyun Atchaya Paathiram Trust,
AC No: 110031396472
Canara - Madurai West Avani Moola Stteet Branch,
IFSC: CNRB0001010
MICR: 625015006
No comments:
Post a Comment