நான்கு வருட கல்வி கட்டணத்தை உடனே செலுத்த நிர்ப்பந்தம் நானூறு கிலோமீட்டர் பயணித்து லட்சக்கணக்கில் கொடுத்து உதவிய கல்விக்கடவுள்
நான்கு ஆண்டுகளாக கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருவதாக உதவி கேட்ட பாண்டிய நாட்டு மாணவிக்கு சோழ தேசத்தில் இருந்து சென்று உதவி புரிந்த அறக்கட்டளை நிறுவனத்திற்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார் மாணவி.
மதுரை மாவட்டம் செக்கானூரனி பகுதியைச் சேர்ந்த முருகேசன் யோகலட்சுமி தம்பதியினரின் மூன்றாவது மகளாக பிறந்தவர் ஜெயசுருதி.
ஜெயசுருதி மூன்று வயதாக இருக்கும் பொழுது முருகேசன் இறந்துவிட்டார்.
இதனை அடுத்து யோகலட்சுமி மூன்று பெண் குழந்தைகளையும் சிரமப்பட்டு படிக்க வைத்தார்.
ஜெயசூர்யா சிறு வயது முதல் படிப்பில் சுட்டியாக விளங்கி வந்தார்.
பன்னிரண்டாம் வகுப்பில் 80 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சடைந்த ஜெய சுருதி விருதுநகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் சேர்ந்தார்
தனது குடும்பத்தின் நிலைமையை கல்லூரி நிர்வாகத்திடம் ஜெய சுருதியின் தாய் எடுத்துக் கூறினார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக கட்டணம் எதுவும் செலுத்தாமல் படித்து வந்த மாணவி ஜெய சுருதிக்கு இந்த ஆண்டு இறுதித் தேர்வு எழுத முழு கட்டண தொகை செலுத்தினால்தான் தேர்வு எழுத முடியும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துவிட்டது
இதனால் செய்வது அறியாமல் தவித்து வந்த மாணவி ஜெயசுருதி தஞ்சையில் உள்ள ஜோதி அறக்கட்டளையின் உதவியை நாடினார்
மாணவியின் நிலையை புரிந்து கொண்ட அறக்கட்டளை நிர்வாகம் தஞ்சையில் இருந்து பயணித்து மதுரையில் உள்ள மாணவியின் சொந்த ஊருக்கு நேரடியாக சென்று நான்கு ஆண்டுக்கான கல்வி கட்டணம் முழு தொகையையும் வழங்கி உதவி செய்து வாழ்த்தியது.
சமயம் அறிந்து உதவி செய்பவர் கடவுளுக்கு இணையானவர் என்று கூற்று உண்டு அதற்கு உதாரணமாக உதவி செய்த அறக்கட்டளைக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டார் மாணவியும் அவர் குடும்பத்தினரும்.
No comments:
Post a Comment