மதுரை சிந்தாமணி இருசக்கர வாகனம் மீது மீது டிப்பர் லாரி மோதியதில் உடல் நசுங்கி ஐடி நிறுவன ஊழியர் பலி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 15 October 2024

மதுரை சிந்தாமணி இருசக்கர வாகனம் மீது மீது டிப்பர் லாரி மோதியதில் உடல் நசுங்கி ஐடி நிறுவன ஊழியர் பலி.

 


மதுரை சிந்தாமணி இருசக்கர வாகனம் மீது மீது டிப்பர் லாரி மோதியதில் உடல் நசுங்கி ஐடி நிறுவன ஊழியர் பலி.



மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள சின்ன அனுப்பானடியை சேர்ந்தவர் முத்துராமன். இவரது மகன் வீரசரவணன் (வயது 28). . இவர் அப்பகுதியில் உள்ள பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் ஐ டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்து கொண்டிருக்கிறார்.


தினமும் காலையில் வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு செல்வது வழக்கம்.


இன்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து சிந்தாமணி ரிங் ரோடு அருகே வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.


அப்போது சிந்தாமணி ரிங் ரோடு அருகே உள்ள அரிசி ஆலை அருகே வீரசரவணன் சென்ற இருசக்கர வாகனம் சிந்தாமணி பகுதியில் இருந்த வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் வீர
சரவணன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.


இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து காவல் புலனாய்வு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அர்த்த வெள்ளத்தில் உடல் சிதறி இறந்து கிடந்தாவீரசரவணன் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் விபத்து ஏற்படுத்திவிட்டு பயத்தில் ஓடி சென்று விட்டார் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பணிக்காக வேலைக்கு சென்று கொண்டிருந்தவர் மீது லாரி மோதி சம்பவ இடத்திலே உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad