மதுரையில் மறைந்த இசை மேதை S.P.பாலசுப்பிரமணியன் 4ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி: பாடல்கள் பாடி, மலர் தூவி அஞ்சலி - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 26 September 2024

மதுரையில் மறைந்த இசை மேதை S.P.பாலசுப்பிரமணியன் 4ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி: பாடல்கள் பாடி, மலர் தூவி அஞ்சலி

 


மதுரையில் மறைந்த இசை மேதை S.P.பாலசுப்பிரமணியன் 4ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி: பாடல்கள் பாடி, மலர் தூவி அஞ்சலி.


இசை மேதை மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ மகா பெரியவா கோவிலில் வைத்து அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் தலைவர் நெல்லை பாலு தலைமையில் ஆடிட்டர் சேதுமாதவா, வாசுதேவன் உள்ளிட்டோர் அவரின்  திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து எம்எஸ்கே இன்னிசை குழுவை சேர்ந்த பாடகர்கள் ஜோசப், சிந்து உள்ளிட்டோர் எஸ்பிபி பாடிய ஆயர் பாடி,  இதோ.. இதோ... என் பல்லவி, சங்கீத மேகம், உன்னை நினைச்சேன் பாட்டுப்பாடிச்சேன் உள்ளிட்ட பாடல்கள் பாடி பாடல்கள் மூலம் அஞ்சலி செலுத்தினர். இந்தப் நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் இரண்டு நிமிட அஞ்சலி செலுத்திய பிறகு புஷ்பா அஞ்சலி செலுத்தினர்.


தொடர்ந்து அவரது சேவை, பாடல்கள் உள்ளிட்டவை குறித்து நெல்லை பாலு பேசும் போது: 


இசை மேதை எஸ்பிபி அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட 16 இந்திய மொழிகளில், சுமார் 40 ஆயிரம் பாடல்களை பாடிய பெருமைக்குரியவர். இதற்காக கின்னஸ்  சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றவர் என்றும், தனது பரம்பரை வீட்டை  பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆந்திர மாநிலம், நெல்லூரில் உள்ள தனது பரம்பரை வீட்டைக்  காஞ்சி மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் ஒப்படைத்து அதில் ஒரு சமஸ்கிருத வேதப் பாடசாலையை ஆரம்பிக்கவே இந்த தானத்தைச் செய்துள்ளதாகக் கூறியதை நினைவு கூர்ந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad