உதயநிதி ஸ்டாலின் ஒற்றை செங்கலை காட்டி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விளம்பரம் தேடினார் அறிவிக்கப்படாத முதலமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தை ஆய்வு செய்தால் முன்னேற்றம் ஏற்படும் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 9 September 2024

உதயநிதி ஸ்டாலின் ஒற்றை செங்கலை காட்டி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விளம்பரம் தேடினார் அறிவிக்கப்படாத முதலமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தை ஆய்வு செய்தால் முன்னேற்றம் ஏற்படும்

 


உதயநிதி ஸ்டாலின் ஒற்றை செங்கலை காட்டி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விளம்பரம் தேடினார் அறிவிக்கப்படாத முதலமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தை ஆய்வு செய்தால் முன்னேற்றம் ஏற்படும்



கொலை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது இதில் கவலை என்னவென்றால் சட்ட ஒழுங்கை பாதுகாக்கிற காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை


கலைத்துறையில் உள்ள செல்வாக்கை பொது வாழ்க்கைக்கான செல்வாக்காக மாற்றுவதற்கு இடையூறாக இருக்கக்கூடிய சவால்களை தகர்ப்போம்  என சொல்லியிருக்கும் நடிகர் விஜய் செயல் வடிவத்தில் எப்படி வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்




எடப்பாடியாரின் தலைமையேற்று 500க்கும் மேற்பட்டவர்கள். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலை அதிமுகவில் இணைந்தனர்.


கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் தலைமையேற்று திருமங்கலம் தொகுதியில்  திருமங்கலம் சுற்றுவட்டார  பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெண்கள்,  சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.


மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த தெற்கு ஒன்றிய செயலாளர் கொடிவைரன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெண்கள் சாரை சாரையாக வந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித்தலைவி திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் மேலும் அதிமுகவில் இணைத்துக் கொண்டவர்களுக்கு உணவை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர் பி உதயகுமார் வழங்கினார் தொடர்ந்து தாய் கழகத்தில் இணைந்த தெற்கு ஒன்றிய செயலாளர் கொடிவைரன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் இளைஞர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்


தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் செய்தியாளரிடம் கூறும்போது

உதயநிதி ஸ்டாலின் மதுரை வருகையால் மதுரையே அல்லோலப்படுகிறது. பட்டா வழங்கும் விழாவா உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம் வழங்கும் விழாவா என மதுரை மக்கள் முகம் சுளிக்கும் வகையில் இந்த விழா உள்ளது. அமைச்சர் மூர்த்தி பத்திரிகையாளர்களை தகாத வார்த்தையில் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. அவர் நிச்சயம் இதை வாபஸ் பெற வேண்டும் இல்லை என்றால் இதை பொதுச் செயலாளர்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்வேன். அதிமுக ஆட்சியின் போது எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு பயணம் சென்ற போது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்டார் அதைத்தான் இப்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எங்கள் எடப்பாடியார் கேட்கிறார். ஆனால் அதை அவர் அக்கறை கொள்வதில்லை. அமெரிக்கா சென்று சைக்கிள் ஓட்டி பாட்டு பாடுகிறார், இங்கு பாடினால் கூட யாருக்காவது கேட்கும் அங்கே பாடினால் யாருக்கு கேட்கும். நெஞ்சை பதை வதைக்கும் வகையில் கொலை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதில் கவலை என்னவென்றால் சட்ட ஒழுங்கை பாதுகாக்கிற காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை.

உதயநிதி ஸ்டாலின் ஒற்றை செங்கலை காட்டி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விளம்பரம் தேடினார். அறிவிக்கப்படாத முதலமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் நேரம் இருந்தால் அருகில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தை ஆய்வு செய்தால் அந்த வேலையில் முன்னேற்றம் ஏற்படும் என நினைக்கிறோம். மதுரைக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களை எல்லாம் அவர் ஆய்வு மேற்கொள்வாரா. கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடியை அகற்றுவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்தனர் தற்போது வந்துள்ள அமைச்சர் உதயநிதி விமான நிலையம் செல்லும் வழியில் அந்த சுங்கச்சாவடியை ஆய்வு செய்து மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுப்பாரா. விமான நிலைய அண்டர் பாஸ் வேலையை ஆய்வு செய்வாரா. மதுரைக்கு ஏதாவது ஆக்கபூர்வமான செயலை செய்தால் அவர் பதவிக்கு அழகாக இருக்கும். இது பட்டா கொடுக்கின்ற விழா அல்ல இளவரசருக்கு முடி சூட்டுகின்ற முடியாட்சி விழா.

மகாவிஷ்ணு விவகாரம் குறித்த கேள்விக்கு:

பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் எதிர்கால வழிகாட்டுதல் குறித்து பேசலாம். அவர்களுடைய ஆற்றல் மற்றும் தனித்தன்மையை வளர்ப்பதற்கு அதற்குரிய பேச்சாளர்கள் உள்ளனர் அவர்களை வைத்து பேசலாம். இவர் ஏதோ ஸ்டாண்ட் அப் காமெடி செய்து யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர், பல சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சர்ச்சையான பேச்சு மாணவர்களின் எதிர்காலத்திற்கு கேள்விக்குறியாக அமையும்.

நடிகர் விஜய் கட்சிக்கு அங்கீகாரம் குறித்த கேள்விக்கு:

நடிகர் விஜய்க்கு ஏற்கனவே வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளோம். மாநாடு நடத்த உள்ளார்கள், பல்வேறு சவால்கள் உள்ளது, பொதுவாழ்வு என்பது எளிமையானது அல்ல. புரட்சித்தலைவரையும் பேரறிஞர் அண்ணாவையும் அவர் கொடி அறிமுக விழாவில் கொண்டு வந்திருந்தது அவர்களை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது தெரிகிறது. அவருக்கு கலைத்துறையில் உள்ள செல்வாக்கை பொது வாழ்க்கைக்கான செல்வாக்காக மாற்றுவதற்கு இடையூறாக இருக்கக்கூடிய சவால்களை தகர்ப்போம் என்று சொல்லி இருக்கிறார். அது செயல் வடிவத்தில் எப்படி வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad