வேளாண்மை துறையில் ஆத்மா திட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு தொழில்நுட்ப மேலாளர் இரண்டு உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் என சென்னை நீங்களாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து வட்டாரங்களிலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 7 September 2024

வேளாண்மை துறையில் ஆத்மா திட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு தொழில்நுட்ப மேலாளர் இரண்டு உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் என சென்னை நீங்களாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து வட்டாரங்களிலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள்

 வேளாண்மை துறையில் ஆத்மா திட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும்  ஒரு தொழில்நுட்ப மேலாளர் இரண்டு  உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் என சென்னை நீங்களாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து வட்டாரங்களிலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் 2012 மார்ச் முதல் மிகக்குறைந்த ஊதியத்தில் பணி செய்து வருகிறார்கள். 2014 முதல் மத்திய அரசு திட்டமான இதற்கு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கியது ஆனால் மாநில அரசு அதை ஊழியர்களுக்கு வழங்காமல் தமிழக அரசு வேளாண் துறை வேறு திட்டத்திற்கு இந்த நிதியை பயன்படுத்திக் கொண்டது. G.O 171 இந்த உத்தரவின் மூலம் 24கோடி மத்திய அரசு வழங்கிய ஊதிய உயர்வை வேறு திட்டத்திற்கு மாநில அரசு மாற்றிக் கொண்டது இதை எதிர்த்து ஒப்பந்த பணியாளர்கள் 565 பேர் வழக்கு தொடுத்து பணியாளருக்கு சாதகமான தீர்ப்பை பெற்றார்கள். அதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது அதிலும் இடைக்கால உத்தரவாக ஆத்மா திட்டம் இருக்கும் வரை தொடர்ந்து இடைநிறுத்தாமல் பணி வழங்கவும் உத்தரவிட்டது. அரசு மேல்முறையீடு 2018 ல் செய்தது இதைக் காரணம் காட்டி வழக்கு நிலுவையில் இருப்பதால் ஆத்மா திட்ட பணியாளர்களுக்கு மத்திய அரசு வழங்கக்கூடிய ஊதிய உயர்வை இதுவரை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. ஆனால் வழக்கு ஊதிய உயர்வு சம்பந்தமானது அல்ல ஊதிய உயர்வு வழங்குவதை நிறுத்தி வைக்க மாநில அரசு தடையானை எதுவும் பெறவில்லை இவ்வாறு இருக்க எவ்வித முகாந்திரமும் இல்லாமல் ஆத்மா பணியாளர்களை வஞ்சிக்கும் நோக்கில் சொற்ப ஊதியத்தில் 2012 முதல் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். தற்போது உள்ள விலைவாசிக்கு ஏற்ப  அவர்கள் வாழ்க்கை நடத்த முடியாமல் எட்டு நபர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் மன உளைச்சலோடு பணிச்சுமைகளோடு பணி செய்து வருகிறார்கள் பெண்களுக்கு பெருகால விடுப்பு கிடையாது ஒரு நாள் கூட தற்செயல் விடுப்பு கிடையாது. ஒரு மாடல் அரசு பணியாளர் விரோத கொள்கை கொண்டிருப்பது வேதனையாக உள்ளது என திட்ட ஊழியர்கள் மன குமுறலோடு பணி செய்து வருகிறார்கள் இதை அரசு கனிவான கவனத்திற்கு எடுத்துக் கொண்டு அவர்களுக்கு விடியலை தருமா  என எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் (இவ்வாறு ஒவ்வொரு மாவட்டமும் தங்கள் பகுதியில் பத்திரிகை செய்தியை வெளியிட வேண்டும்) ஊதிய உயர்வு வழங்க அரசு கூறிவரும் சாக்குபோக்கை பத்திரிகை  வழியாக தொடர்ந்து மக்கள் மத்தியிலும் அரசிற்கும்  வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad