மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி- இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என 18 வது நாளாக கருப்புத் துணியால் கண்ணை கட்டி ஆசிரியர்கள், ஊழியர்கள் தர்ணா போராட்டம்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த சில மாதங்களாகவே நிதி நெருக்கடி காரணமாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி கருப்பு பட்டை அணிந்து ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்கள் ஆசிரியர் பணிக்கு இடையூறில்லாமல், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் காலையி9 9 மணி முதல் 10 மணிவரையிலும் வேலை நேரத்திற்கு முன்பும், வேலை நேரத்திற்கு பிறகு மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை தொடர் போராட்டமாக தினந்தோறும் நடைபெறுகிறது.
தேவைப்பட்டால் ஆசிரியர்கள், அலுவலர்கள் இரவு முழுக்க உள்ளிருப்பு போராட்டம் செய்வது என்றும் தீர்மானம் செய்துள்ளனர்.
அகிம்சை வழியில் அமைதியான முறையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் சம்பள பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரையிலும் போராட்டம் தொடர்ந்து 18 வது நாளாக நடைபெ நடைபெற்று வருகிறது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அலுவலர்கள், ஓய்வூதியர்கள் கடந்த இரண்டு மாதமாக வழங்கப்படாத ஊதியத்தை வழங்க கோரியும், இரண்டு ஆண்டுகளாக தொடரும் சம்பள பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண பல்கலை அதிகாரிகளையும் தமிழக அரசையும் வலியுறுத்தி கறுப்பு துணியை கண்ணில் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment