விவசாயிகளுக்கு மஞ்சள் ஒட்டும் பொறிகுறித்து செயல் விளக்கம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 11 September 2024

விவசாயிகளுக்கு மஞ்சள் ஒட்டும் பொறிகுறித்து செயல் விளக்கம்.

 


விவசாயிகளுக்கு மஞ்சள் ஒட்டும் பொறிகுறித்து செயல் விளக்கம்.




சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் ஐந்து வாசல் அய்யனார் விவசாயிகள் நலச் சங்கத்தில் விவசாயிகளுக்கு  தென்கரை கிராமத்தில் காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் துறை மாணவிகள் தங்கி  கிராம தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி, நாற்றங்கால் மேலாண்மை, உர வேளாண்மை, பூச்சி மேலாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கி வருகின்றனர். இதே போல் இங்கு உள்ள தென்னையின் முக்கியத்துவம் பற்றியும், அதற்கு அரசு அளிக்கும் மானியம் பற்றியும், இப்போது தென்னையில் அதிகரிக்கும் வெள்ளை ஈயை எப்படி கட்டுப்படுத்துவது என்பது பற்றியும், தென்னை மதிப்பு கூட்டு பொருள்களாக மாற்றுவதன் முக்கியத்துவம் பற்றியும் பேசினர். வெள்ளை ஈயை கட்டுப்படுத்துவதற்கு மஞ்சள் ஒட்டும் பொறி குறித்து செயல் விளக்கமும் செய்து காட்டினர். விவசாயிகளுக்கு போர்டாக்ஸ் கலவை குறித்து செயல் விளக்கம் குறித்து முக்கியத்துவம் இதனை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றியும், போர்டாக்ஸ் கலவை எந்தெந்த பயிர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் விளக்கினர். இதனைத் தொடர்ந்து இது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர். தேசிய ஊட்டச்சத்து வாரம் குறித்து விழிப்புணர்வு ஊத்துக்குளி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறித்து முக்கி தத்துவம், கார்போ ஹைட்ரேட் பற்றியும், புரதம் பற்றியும், ஊட்டச்சத்து குறைபாட்டால் வரும் பிரச்சினைகள் பற்றியும் விளக்கினர்.  ஊட்டச்சத்து மிகுந்த சத்துமாவு புட்டு அவித்த கொண்டைக்கடலை முளைகட்டிய பச்சைப் பயிறும் இங்குள்ள மாணவ மாணவிகளுக்கு வழங்கினர். விவசாயிகளுக்கு முட்டை மிதப்பு முறை குறித்து செயல் விளக்கம் விவசாயிகளுக்கு முட்டை மிதக்கும் முறையின் மூலம் தரமான விதைகளை பிரித்து எடுக்கும் முறைபற்றியும், இதன் பயன்கள் பற்றியும் எடுத்துக் கூறி பேசினர். இதன் விளக்கமும் செய்து காட்டினர். இதில் பேராஜெயிந்த், இந்துராணி, பபிதா, முத்துலட்சுமி, கோமுகி ஆகியோர் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad