திருமங்கலம் அருகே அரசு நகர் பேருந்தை வழிமறித்து கிராம மக்கள் போராட்டம் - உரிய நேரத்திற்கு வருவதில்லை எனவும், இலவச பேருந்து என்பதால் பொதுமக்களை அவதூறாக ஊழியர்கள் பேசுவதாகவும் குற்றச்சாட்டு.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ராயபாளையம் கிராமத்தில் , அரசு நகர் பேருந்தை மறித்து மாணவ, மாணவியர்கள் உட்பட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாள் தோறும் 11 முறை கிராமத்திற்கு வந்து செல்லும் அரசு நகர் பேருந்து , உரிய நேரத்திற்கு வருவதில்லை என்பதால், பள்ளி மாணவ , மாணவிகள் மற்றும் கல்லூரி பயிலும் மாணவர்கள் உரிய நேரத்திற்கு வகுப்பறைக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருப்பதாலும், அரசு இலவச பேருந்து என்பதால் ஓட்டுனர் நடத்துநர் ஆகியோர் பொதுமக்களை அவதூறாகவும், ஆபாசமாக பேசி கேவலப்படுத்துவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 நிமிட போராட்டத்திற்கு பிறகு, திருமங்கலம் அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர்.
No comments:
Post a Comment