பறக்கின்ற விமானத்தில் போராட்டம் நடத்திய பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் முருகன் ஜி உட்பட 6 பேர் திருமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர் - ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்ற விசாரணை - மாஜிஸ்திரேட் வருகிற செப்டம்பர் மாதம் 11ந்தேதி மறு விசாரணைக்கு ஒத்தி வைப்பு.
கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி மதுரையிலிருந்து சென்னை செல்லக்கூடிய இண்டிகோ விமானத்தில் பாரதீய பார்வர்ட் பிளாக் கட்சியைச் சார்ந்த தலைவர் முருகன் ஜி தலைமையில் , 8 பேர் கொண்ட குழுவினர் விமானம் பறக்கும் போது மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் எனக் கூறி ஆரவாரம் செய்து கூச்சலிட்டதால் , விமானத்தில் சென்ற பயணிகள் அலறினர்.
இதனைத் தொடர்ந்து, விமானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மதுரை பெருங்குடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் .அதன் பின் ஜாமினில் 8பேர் வெளியில் வந்த நிலையில், அதில் இரண்டு பேர் இயற்கை மரணம் அடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, இவ்வழக்கு ஐந்தாண்டுகளுக்கு பிறகு விசாரணைக்கு இன்று திருமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சண்முகராஜ் முன்பு வந்தபோது , நீதிமன்றத்தில் ஆஜரான முருகன் ஜி மற்றும் 6 பேர் நீதிமன்ற வளாகத்திலேயே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என்ற கண்டன கோஷத்துடன் , நீதிமன்ற வளாகத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, வழக்கு விசாரணையை வருகிற 4.11.2024 அன்று , மாஜிஸ்திரேட் சண்முகராஜ் , மறு விசாரணைக்கு ஒத்தி வைத்தார்.
No comments:
Post a Comment