வக்பு வாரியத்தில் பல லட்சம் ஏக்கர் இடங்கள் உள்ளது. அதானிக்கும், அம்பானிக்கும் இந்த இடங்களை தாரை வார்ப்பதாகத்தான் திட்டமாக இருக்கும். -எம்பி விஜய் வசந்த் பேட்டி - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 10 August 2024

வக்பு வாரியத்தில் பல லட்சம் ஏக்கர் இடங்கள் உள்ளது. அதானிக்கும், அம்பானிக்கும் இந்த இடங்களை தாரை வார்ப்பதாகத்தான் திட்டமாக இருக்கும். -எம்பி விஜய் வசந்த் பேட்டி


வக்பு வாரியத்தில் பல லட்சம் ஏக்கர் இடங்கள் உள்ளது. அதானிக்கும், அம்பானிக்கும் இந்த இடங்களை தாரை வார்ப்பதாகத்தான் திட்டமாக இருக்கும். -எம்பி விஜய் வசந்த் பேட்டி


கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை வந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த் விஜய். மதுரை மண்டேலா நகர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:


வக்பு வாரிய சட்ட திருத்தத்தை எதிர்க்கட்சி ஆகிய நாங்கள் எதிர்த்துள்ளோம். வக்பு வாரிய உறுப்பினராக யார் வேண்டுமென்றாலும் இருக்கலாம் என்று சொல்வது பாரம்பரியமாக கட்டுப்பாடோடு நடந்து வரும் ஒரு வாரியத்தின் மீது களங்கத்தை உண்டாக்கும் விஷயமாக உள்ளது. இஸ்லாமிய சமுதாயத்தை ஒதுக்குவதாக உள்ளது. வக்பு வாரியத்தில் பல லட்சம் ஏக்கர் இடங்கள் உள்ளது. அதானிக்கும், அம்பானிக்கும் இந்த இடங்களை தாரை வார்ப்பதாகத்தான் பாஜகவின் திட்டமாக இருக்கும்.


சென்னை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்தையும் மத்திய அரசு வஞ்சிக்கிறது. தூத்துக்குடி, மதுரை ஆக இடங்களில் கன மழை பெய்த போது தேசிய பேரிடராக அறிவிக்க கேட்டதற்கு செவி சாய்க்கவில்லை, வயநாட்டில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 


பல்லாயிரக்கணக்கானோர் உடமைகளை இழந்துள்ளனர். அதையும் தேசிய பேரிடராக அறிவிக்க கேட்டதற்கு செவி சாய்க்கவில்லை. பிரதமர் இன்று ஆய்வு செய்துள்ளார், நிச்சயமாக அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது, சரியான நிதி கொடுத்தால் தான் அவர்களை மீட்டெடுக்க முடியும். கண்டிப்பாக பிரதமர் இதற்கு பதில் சொல்லி ஆக வேண்டும்.


மெட்ரோ மட்டுமல்ல எந்த திட்டமாக இருந்தாலும் தமிழகத்திற்கு அளவாக தான் கொடுக்கிறார்கள். புதிய திட்டங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இது நம்மை வஞ்சிக்கும் விதமாகத்தான் உள்ளது. அதற்காகத்தான் பாராளுமன்றத்தில் இந்திய கூட்டணி சார்பாக குரல் கொடுத்து வருகிறோம். நிச்சயம் இதற்கான பலன் கிடைக்கும். இந்த திட்டங்களை பெறுவது தமிழக எம்பிக்களின் கடமையாக இருக்கும் என கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad