திருமங்கலம் அருகே அரசு பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 27 August 2024

திருமங்கலம் அருகே அரசு பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.

 


திருமங்கலம் அருகே அரசு பேருந்து -  கார் நேருக்கு நேர் மோதி விபத்து -  ஒருவர் பலி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.



திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை அரசு பேருந்தும் , காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட  விபத்தில் , கார் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். டி. கல்லுப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள பாம்பு கோவில் சந்தை பகுதியைச் சேர்ந்த செல்வம் -  மயில் தம்பதிக்கு ஒரு மகன்,ஒரு மகள் உள்ளனர். மூத்த மகனை மேல்படிப்பிற்காக சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ப்பதற்காக புளியங்குடியில் இருந்து காரில் செல்வம் குடும்பத்தினர் நான்கு பேர்,  அவரது சகோதரர் மாரியப்பன் அவரது மனைவி அன்னலட்சுமி,  குழந்தைகள் கீர்த்தனா, உமாதேவி , சிவன்யா மற்றும் ஓட்டுநர் கணேசமூர்த்தி ( 37 ) உட்பட 10 பேர் சென்னைக்கு காரில் சென்றவர்கள்,  நேற்று செல்வம் மகனை கல்லூரியில் சேர்த்து விட்டு குடும்பத்துடன் இரவு சென்னையில் இருந்து புளியங்குடி நோக்கி 9 பேருடன்  காரில் வந்து கொண்டிருந்தனர்.
       கார் மதுரை மாவட்டம் திருமங்கலம் -  -  கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் டி.குன்னத்தூர்  அருகே வந்தபோது, டி.கல்லுப்பட்டியிலிருந்து 20 பயணிகளுடன் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
           அரசு பேருந்து மீது கார் மோதிய வேகத்தில் 50 அடி தூரம் பின்னோக்கி வந்து சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் சரிந்தது. விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியதால் , கார் ஓட்டுநர் கணேசன் மூர்த்தி இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .மேலும் காரில் இருந்தவர்கள் பலத்த காயம்படைந்தனர். சம்பவத்தை தொடர்ந்து , பேருந்தில் வந்த பயணிகள் விபத்தில் சிக்கி அவர்களை மீட்டு டி.கல்லுப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பலத்த காயம் அடைந்த அன்னலெட்சுமி - 35,கணவர் மாரியப்பன் 38, செல்வம்- 46 மனைவி
மயில் 37 மாரியப்பன் மூத்த மகள் கீர்த்தனா 10 ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் உமாதேவி 7,சிவன்யா  3 இருவருக்கும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
             

விபத்தில் உயிரிழந்த கணேசமூர்த்திக்கு அகல்யா என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த டி. கல்லுப்பட்டிpwww போலீசார்,  இறந்த கணேசன் மூர்த்தி உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவனை கல்லூரி படிப்பிற்காக சேர்த்து விட்டு சொந்த ஊர் திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் விபத்தில் சிக்கி காயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad