மதுரை மேற்கு வட்டார கல்வி அலுவலர் பணிநிறைவு பாராட்டு விழா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday 28 July 2024

மதுரை மேற்கு வட்டார கல்வி அலுவலர் பணிநிறைவு பாராட்டு விழா.


மதுரை கோசாகுளம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீராம் மஹாலில், நேற்று (சனிக்கிழமை) மேற்கு வட்டார கல்வி அலுவலரும் முனைவருமான ஜான் கென்னடி அலெக்சாண்டரின் பணி நிறைவு பாராட்டு விழா, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுப்பாராஜு தலைமையில் நடைபெற்றது.

மதுரை உதவித் திட்ட அலுவலர் சரவண முருகன் முன்னிலை வகித்தார். மேற்கு வட்டாரக் கல்வி அலுவலர் ஜோஸ்பின் ரூபி வரவேற்பு வழங்கினார். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சுப்பாராஜு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில், 1986 ல் கல்வி துறையில் இடைநிலை ஆசிரியராக முதன் முதலில் பணியேற்று பின்பு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று தற்போது 25 ஆண்டு காலமாக வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்தார். 


மொத்தம் 38 ஆண்டு காலமாக இந்த கல்வித் துறையில், பணிபுரிந்து மதுரை ஆட்சியர் மற்றும் அமைச்சரிடம் பல விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட திருமங்கலம் தொடக்கக் கல்வி அலுவலர் கணேசன் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து, வீரபாண்டி தொடக்கப்பள்ளி  தலைமை ஆசிரியர் செல்வகுமரேசன், சிக்கந்தர் சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பாலசந்திரன், திருப்பாலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சாம்ராஜ், ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப்பள்ளி சம்பகுளம் ஆசிரியர் சிவபாலன், எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் தென்னவன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


மேலும், விழா ஏற்பாட்டினை, மேற்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad