கப்பலூர் டோல்கேட்டை இடம்மாற்றம் செய்து நிரந்திர தீர்வு காண கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் மற்றும் பொதுமக்கள்,போராட குழு கைது - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 30 July 2024

கப்பலூர் டோல்கேட்டை இடம்மாற்றம் செய்து நிரந்திர தீர்வு காண கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் மற்றும் பொதுமக்கள்,போராட குழு கைது

 


கப்பலூர் டோல்கேட்டை  இடம்மாற்றம் செய்து நிரந்திர தீர்வு காண கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் மற்றும் பொதுமக்கள்,போராட குழு கைது



மதுரை கப்பலூர் டோல்கேட்டை  இடமாற்றம் செய்து நிரந்தரமாக  தீர்வு காண கோரி திருமங்கலம் தொகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர், இதனை தொடர்ந்து பல கட்ட வார்த்தையில் நடைபெற்றதில் தோல்வி அடைந்ததில் கப்பலூர் டோல்கேட்டை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் போராட்ட குழு உண்ணாவிரதம் இருந்தனர் அதனை தொடர்ந்து காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்


முன்னதாக கப்பலூர் டோல்கேட்க்கு வந்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார
பொதுமக்களிடத்தில் மனுக்கள் வாங்க வேண்டும் அனுமதி தாருங்கள் என்று கேட்ட பொழுது, அதற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது தொடர்ந்து காவல்துறையிடம் கடுமையான வாக்குவாததிற்கு  நடைபெற்ற பின்பு அனுமதி கொடுக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மனு கொடுக்க வந்த  அப்பகுதிக்கு பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


இதனை தொடர்ந்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் கப்பலூர் டோல்கேட் அகற்றப்படும் என்று அப்போது  எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் வாக்குறிதி அளித்தார் .தற்போது மூன்று ஆண்டுகள்  ஆகியும் அகற்றப்படவில்லை எனவே அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல உண்ணாவிரதம் இருக்கிறோம்  என்று அறிவித்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற போது காவல்துறையினர் கைது செய்து மேல கோட்டையில் உள்ள கல்யாண மண்டபத்தில் அடைத்து வைத்தனர் இதனை தொடர்ந்து அந்த மண்டபத்தில் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் ஈடுபட்டார்



இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது


தென் தமிழகத்தில் நுழைவாயிலாக கப்பலூர் டோல்கேட் விதிமுறையை மீறி கடந்த 2010 ஆண்டு வைக்கப்பட்டது.இதனை தொடர்ந்து கடந்த எடப்பாடியார் ஆட்சி காலத்தில் உள்ளூர் மக்களுக்கு சுங்கச்சாவடியில்  கட்டண முழு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.


தற்போது 2021 ஆண்டிலிருந்து கட்டண விதிமுறை தளர்த்தப்பட்டது தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கட்டணம் வசூலிக்கப்பட்டு மக்களை கசக்கி புழிகிறது, போராடினால் மக்கள் மீது அடக்குமுறை ஏவுகிறது மேலும் சுங்கச்சாவடி அபதார கட்டண நோட்டீஸ் விடப்பட்டு இரண்டு லட்சம் முதல், 20 இலட்சம் வரை அபதார கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது .


இந்த கப்பலூர் டோல்கேட் விதிமுறைக்கு மீறி அமைக்கப்பட்டதால் அதை வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் போராட்டம் செய்து வருகிறோம்.


தற்பொழுது  டோல்கேட் அகற்றப்பட வேண்டும் என்று திருமங்கலம்  தொகுதி மக்கள் மற்றும் போராட்ட குழுவினர் முழு கடை அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்  இதுவரை நான் 22 மனுக்களை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றேன் ஆனால் எந்த தீர்வும் காணப்படவில்லை .


தற்போது கப்பலூர் டோல்கேட் பிரச்சனையில் மக்களிடத்தில் மனுக்களை வாங்க சென்றபோது காவல்துறை மக்களை கைது செய்கின்றனர் உண்ணாவிரதம் இருக்க முயன்ற போது எங்களையும் கைது செய்துள்ளனர்.



கடந்த 2021 ஆண்டில் அப்போது எதிர்க்கட்சி தலைவவராக இருந்த ஸ்டாலின் இப்பகுதிக்கு வந்த போது திமுக ஆட்சி மூன்று மாதங்களில் வந்துவிடும் அப்போது கப்பலூர் டோல்கேட் அகற்றப்படும் என்று கூறினார் அவர் கூறி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை
அகற்றப்படவில்லை முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னதை அவரின் கவனத்திற்கு  எடுத்துச் செல்ல
அறவழியில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற போது எங்களை கைது செய்துள்ளனர்.


எங்கள் கோரிக்கை எல்லாம் சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்பட்ட கப்பலூர் டோல்கேட்டை நிரந்தரமாக வேறு இடத்திற்கு அகற்றப்பட வேண்டும், அதேபோல் நிலுவை கட்டணம் என அனுப்பப்பட்ட லீகல் நோட்டீசை திரும்ப பெற வேண்டும், என்று போராடி வருகிறோம்.


தொடர்ந்து அண்ணா திமுக மக்களுக்காக போராடும் எத்தனை அடக்கமுடியை அரசு செய்தாலும் மக்களுக்காக போராடுவோம் இந்த அரசு மக்கள் உணர்வை மதிக்காத அரசாக உள்ளது என கூறினார்.


தொடர்ந்து கப்பலூர்,மேலக்கோட்டை என பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் செய்த போது அவர்களை காவல்துறை கைது செய்தனர்


மண்டபத்தில் அடுத்து வைக்கப்பட்ட ஆர் பி உதயகுமாரை செய்தியாளர்கள் பேட்டி எடுக்க வேண்டும் என்று கூறிய போது காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது தொடர்ந்து காவல்துறைக்கும் செய்தியாளருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.


இந்த கைது சம்பவத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன் மாணிக்கம் கருப்பையா உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad