இந்த ஆர்ப்பாட்டத்தில் வெளியேறு வெளியேறு இந்து கோவில்களை மட்டும் சீரழிக்கும் தமிழக அரசே கோவில்களை விட்டு வெளியேறு நாதியில்லை நாதியில்லை ஆயிரக்கணக்கான கோயில்களில் விளக்கேற்ற பூஜை செய்ய பராமரிக்க நாதியில்லை ஆயிரம் ஆயிரம் கோவில்களில் விளக்கு இல்லை வழிபாடு இல்லை அர்ச்சனை இல்லை அபிஷேகம் இல்லை ஆலயம் காக்க தவறிய அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு மெக்கா செல்ல அரசு மானியம் ஜெருசலம் செல்ல அரசு மானியம் கோயிலுக்கு பஸ் ஏறுனா சிறப்பு கட்டணம் சிறப்பு கட்டணம் கட்டணமோ கட்டணம் அர்ச்சனை பண்ண கட்டணம் அபிஷேகம் செய்ய கட்டணம் மொட்டை அடிக்க கட்டணம் காது குத்த கட்டணம் இதையெல்லாம் தாண்டி போயி சாமிய பார்க்க போனாலே தரிசனத்திற்கும் கட்டணம் காசு கொடுத்து தரிசனம் செய்ய கடவுள் என்ன காட்சி பொருளா ரம்ஜான் வந்தா நோன்பு கஞ்சிக்கு டன்னு டன்னாக அரிசி வழங்கும் அரசு ஆடி மாசம் அம்மனுக்கு கையை விரித்து காட்டுகிறது அநியாயம் இது அநியாயம் இந்து கோவில்களுக்கு மட்டும் அநியாயம் கோவில்கள் இடத்தில் பஸ் ஸ்டாண்ட் இருக்கலாம் கோவில் இடத்தில் நீதிமன்றம் இருக்கலாம் கோவில் இடத்தில் காவல் நிலையம் இருக்கலாம் கோவில் இடத்தில் அரசு அலுவலகங்கள் இருக்கலாம் ஆனால் அரசு நிலத்தில் கோவில் இருந்தால் இடிக்கிறாங்க இடிக்கிறாங்க கோவிலை தானே இடிக்கிறாங்க கோவில் கும்பாபிஷேக அனுமதி கேட்டால் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதி கொடுக்குறாங்க காசு கொடுத்து தரிசன முறையா டிக்கட் போடத்தான் அறநிலைத்துறையா காவடி எடுக்கும் பக்தர்கள் கூட்டம் வசதியின்றி தவிக்குது முன்னோர் கட்டிய கோவிலை இந்த அரசு இடிக்குது தேர்தல் காலம் வந்தால் நீலீக் கண்ணீர் வடிக்குது அறநிலையத்துறையை நம்பி நம்பி ஆகாத காரியம் இந்துக் கோவிலை விட்டு வெளியேற வெளியேறு என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் அலங்காநல்லூர் போலீசார் கைது செய்து திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் இந்து முன்னணி சார்பாக தமிழக அரசு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சுரேந்திரன், தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர் சக்திவேல், முத்துப்பாண்டி, ஒன்றிய துணைத் தலைவர் சேகர், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பிரபு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
No comments:
Post a Comment