திருமங்கலம் அருகே விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள் விவசாயிகள் வேதனை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 29 June 2024

திருமங்கலம் அருகே விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள் விவசாயிகள் வேதனை.

  


திருமங்கலம் அருகே விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள் விவசாயிகள் வேதனை.



மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமான போல் நாயக்கன்பட்டியில் கண்ணன் என்பவர் 15 ஏக்கர் பரப்பளவில்உள்ள தோட்டத்தில் சோளம், கம்பு, கடலை ஆகியவற்றை நீண்ட ஆண்டுகளாக விவசாய நிலங்களில் பயிரிட்டு வருகிறார் இதில் பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த வெயில் முத்து, கார்த்தி, முருகன் மூவரும் பன்றிகளை வளர்த்து வருகின்றனர் இவர்கள் தோட்டத்தில் ஆள் இல்லாத நேரத்தில் வளர்ப்பு பன்றிகளை விட்டு விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக பலமுறைமாவட்ட ஆட்சியர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தார்,  ஆகிய அனைவரிடமும் மனுவினை கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும்  பன்றிகள்  சேதப்படுத்திய விவசாய நிலங்களில் பாதிப்பு பல லட்ச ரூபாய்களை இழந்து இழப்பீடுகளை சந்தித்து தவித்து வருகின்றோம். இதற்கு ஒரு தீர்வு வேண்டும் என்றும் நாங்கள் விவசாயத்தை நம்பி தான் எங்கள் குழந்தைகளை படிக்க வைத்து வருகிறோம் இதில் அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கை கள் எடுக்காது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad