வைகை விநாயகர் ஆலயத்தில் வராகி அம்மன் பிரதிஷ்டை விழா.
மதுரை அண்ணா நகர் , வைகை விநாயர் ஆலயத்தில், வராகி அம்மன் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில், சிவாச்சாரியார்கள், யாகபூஜைகளை நடத்தினர்.
சனிக்கிழமை மாலை கணபதி பூஜை, பிரவேச பலி, கடஸ்தாபனம், பூர்ணா குதி ஆகிய பூஜைகளை நடத்தினர். இன்று காலை 8 மணிக்கு யாகபூஜைகளுடன் தொடங்கி, சண்டி ஹோமம், நவராகி கீர்த்தி ஹோமம், வஸ்திராகுதி, பூர்ண்குதி பூஜைகள் நடத்தப்பட்டு, குடங்கள் புறப்பட்டு, வராஹியம்மனுக்கு, சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகள் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி முத்துக்குமார், மணிமாறன் மற்றும் ஆன்மீக பெண்கள் பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment