கள்ளிக்குடி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட கிராமம் முன்னேற்ற குழுவினருக்காக பயிற்சி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 28 June 2024

கள்ளிக்குடி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட கிராமம் முன்னேற்ற குழுவினருக்காக பயிற்சி.


கள்ளிக்குடி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட கிராமம் முன்னேற்ற குழுவினருக்காக பயிற்சி.


மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் வேளாண்மை துறையின் வேளாண்மை தொழில்நுட்ப வேளாண்மை முகமை திட்டம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களாக மையிட்டான்பட்டி கிராமத்தில் 28/6/2024 அன்று நடைபெற்றது. இந்த பயிற்சியில் செங்கப்படை, ஓடைப்பட்டி, நேசநேரி,நெடுங்குளம், வேப்பங்குளம் ,மறவபட்டி, ஆகிய கிராமங்களில் இருந்து விவசாயிகள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர் மேலும் உருவாக்கப்பட்ட கிராமம் முன்னேற்ற விவசாயிகளுக்கு காரிப் பருவம் குறித்த பயிற்சியானது நடத்தி முடிக்கப்பட்டது. இந்த பயிற்சியானது ஜூன் மாதத்தில் இருந்து பல்வேறு கிராமங்களில் நடத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு பயிற்சிக்கும் 40 விவசாயிகள் மேல் கலந்து கொண்டனர். நடைபெற்ற பயிற்சி வகுப்பில் உயர் அலுவலர்கள் மற்றும் பயிற்சி வழங்கபவர்கள் அந்தப் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆகியோர்  கலந்துகொண்டு சாகுபடி தொழில்நுட்பங்களை விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் இப்ப பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.


திருமங்கலம் செய்தியாளர்
R. வினோத் பாபு
(29.6.2024)

No comments:

Post a Comment

Post Top Ad