விக்கிரமங்கலத்தில் இறகு பந்தாட்ட போட்டி: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday 2 June 2024

விக்கிரமங்கலத்தில் இறகு பந்தாட்ட போட்டி:


 விக்கிரமங்கலத்தில் இறகு பந்தாட்ட போட்டி:



 சோழவந்தான் அருகே, விக்கிரமங்கலம் நேதாஜி உள் விளையாட்டு அரங்கில் முன்னாள் எம்.எல்.ஏ. பி. என். வல்லரசு 25ஆம் ஆண்டு நினைவு கோப்பை இறகுப்பந்தாட்ட போட்டி இரண்டு நாட்கள் நடந்தது .



இந்த போட்டியில், பல்வேறு ஊர்களில் இருந்து இறகுப்பந்து போட்டி வீரர்கள் கலந்து கொண்டனர். இரண்டு நாள் நடந்த போட்டிக்கான பரிசளிப்பு விழா நடந்தது. இவ்விழாவிற்கு, நேதாஜி இறகு பந்தாட்ட குழு தலைவர் ஏ .வி. பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கே. பி. பாண்டியன், கராத்தே மாஸ்டர் ஜோதி ராமலிங்கம், முன்னாள் கவுன்சிலர் ஆர். கே. சாமி ,வக்கீல் இளையரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேதாஜி இரவு பந்தாட்ட குழு செயலாளர் கே.எம். பால்பாண்டியன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. பி.வி. கதிரவன், ஊராட்சி மன்றத் தலைவர் கலியுக நாதன் ஆகியோர் பரிசு கோப்பை வழங்கினர். செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கவிதா ராஜா மற்றும் நேதாஜி இறகுப்பந்தாட்ட குழு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். ராஜாராம் நன்றி கூறினார்


இறகு போட்டியில் 15 வயது பிரிவு பெண்கள் இறுதிப் போட்டியில், முதல் பரிசு தீஷா இரண்டாவது பரிசு தன்ய ஸ்ரீ மூன்றாவது பரிசு வர்ஷா ஹங்சிகா 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆண்கள் முதல் பரிசு ஜெயகிருஷ், இரண்டாவது பரிசு முகேஷ், மூன்றாவது பரிசு ஜெயாஷ் .15 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒற்றையர் பிரிவு ஆண்கள் முதல் பரிசு ருத்ரா, இரண்டாவது பரிசு மிதிலேஷ் சிவா, மூன்றாம் பரிசு ரூபன், நான்காவது பரிசு கவின் இரட்டையர், பிரிவு 15 வயது ஆண்கள் முதல் பரிசு ரூபன், ருத்ரா இரண்டாம் பரிசு மித்லேஷ் சிவா, ஜெய கிரிஷ், மூன்றாவது பரிசு, போன் ராஜ் கவின், நான்காம் பரிசு  லுக்கேஷ் சாய், தமிழ் தமிழ் ஆகியோர் பெற்றனர். மற்றவர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. நாகமலை புதுக்கோட்டை வி.என்.எஸ். அகாடமி ராஜ்குமார், சந்திரன், சதீஷ்குமார், செக்கானூரணி ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad