மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி முதல் முறை விமானத்தில் செல்வதாக மாணவர்கள் நெகிழ்ச்சி. ரோஜாமலர் சாகலெட் வழங்கி வழியனுப்பிய மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த், ஆணையர் தினேஷ்குமார், மண்டல தலைவர் சுவிதா விமல்.
வானில் சிறகடிப்போம் என்ற தலைப்பில் ரோட்டரி கிளப் மதுரை மிட் டவுண் சார்பாக மதுரை அரசு பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்துச் செல்லும் நிகழ்ச்சியில் நடைபெற்றது.
இதற்காக மதுரை விமான நிலையம் வந்த மாணவர்களை மதுரை மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் விமானத்தில் செல்லும் மாணவர்களுக்கு ரோஜா பூ மற்றும் இனிப்புகள் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து எட்டு மாணவ, மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியர் என ஒன்பது பேர் மதுரை விமான நிலையத்தில் இருந்து விமான மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்கள்.,
மேலும் சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்ட நிகழ்ச்சியை பார்வையிட்டு மீண்டும் பேருந்து மூலமாக மதுரை புறப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில் முதல்முறையாக விமானத்தில் செல்வது மகிழ்ச்சியாக இருப்பதாக நெகழ்ச்சியுடன் கூறினார்கள.
திருமங்கலம்
செய்தியாளர்
R. வினோத் பாபு
No comments:
Post a Comment