உசிலம்பட்டி அருகே சுற்றுச்சூழல் தினவிழா: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday 8 June 2024

உசிலம்பட்டி அருகே சுற்றுச்சூழல் தினவிழா:

 


உசிலம்பட்டி அருகே சுற்றுச்சூழல் தினவிழா:


மவுண்டன் வியூ பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினவிழா, மற்றும் மகளி்ர் சுய உதவி விழிப்புணர்வு குழு துவக்கவிழா நடைபெற்றது.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட இ.புதுப்பட்டியில் அமைந்துள்ளது மவுண்டன் வியூ பள்ளி என்ற தனியார் பள்ளி.,


இங்கு ரிலீப் ப்ராஜக்ட்ஸ் இந்தியா சார்பாக பள்ளி வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினவிழா மற்றும் மகளி்ர் சுய உதவி விழிப்புணர்வு குழு துவக்கவிழா நடைபெற்றது.,


இதில் தமிழக நீர்நிலைகள் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் திருமதி.சியாமளா, தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிமன்றத்தலைவர் பாலமுருகமகாராஜா , உசிலம்பட்டி வனச்சரக அதிகாரிகள், டிஜிட்டல் சகி திட்ட மேலாளர் பெருமாள் ஆகியோர்கலந்துகொண்டு பொதுமக்களிடத்தில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சேமிப்பின் அவசியம் பற்றியும் விளக்கப்பட்டது.,


மேலும் இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.,


இந்நிகழ்ச்சியை, ரிலீப் ப்ராஜக்ட்ஸ் இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டி ஏற்பாடு செய்திருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad