மதுரையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இந்தியன்வங்கி ஒரே நாளில் 650 கோடி ரூபாய் கடன் வழங்கி சாதனை
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மகளிர் சுய உதவிகளுக்கு இந்தியன் வங்கி சார்பில் கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது
இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.எல்ஜெயின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்து பேசும்போது ,: இந்தியன் வங்கி 20 ஆண்டுகளுக்கு மேலாக மகளிர்களுக்கு கடன் உதவி வழங்கி வருகிறது. மகளிர் சுயதொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்கின்ற நோக்கில் அவர்களுக்கு பல கோடி ரூபாய் எங்கள் வங்கி கடனாக வழங்கி வருகிறது.
வங்கிகளில் இருந்து கடனை பெறும் நீங்கள் மீண்டும் உரிய தவணை முறையில் வங்கிகளில் கடனை செலுத்தினால் மீண்டும் மீண்டும் நீங்கள் கடனைப் பெறலாம்
குறிப்பாக வங்கியில் பெறக்கூடிய கடனை நீங்கள் கட்ட தவறும் பட்சத்தில் அடுத்தடுத்து வரும் காலகட்டங்களில் வங்கிகளில் இருந்து கடன் பெறுவதில் சிரமம் ஏற்படும்.
அது போன்று இல்லாமல் உரிய நேரத்தில் கடனை அடைத்து மீண்டும் பெரியளவில் கடன் பெற்று பெரும் தொழில் முனைவராக வேண்டும்,வாழ்த்துக்கள் என்றார்.
பின்னர் மதுரை, திருநெல்வேலி, கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த மகளிர் குழுக்களுக்கு கடன் உதவிக்கான காசோலைகளை இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர் எஸ்.எல்.ஜெயின் வழங்கினார்.
அதோடு பல்வேறு பகுதிகளில் இந்தியன் வங்கி சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குவதை காணொளி காட்சி மூலம் பார்த்தார்.
இன்று ஒரே நாளில் மதுரை, கோயமுத்தூர், தர்மபுரி,காரைக்குடி கும்பகோணம் நாகப்பட்டினம்,சேலம் திருநெல்வேலி திருப்பூர் திருச்சி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மகளிர் குழுக்களுக்கு 650கோடி கடன் வழங்கி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் கல பொது மேலாளர் சுதா ராணி விவசாயத்துறை பொது மேலாளர் சந்திரசேகர் மதுரை மண்டல மேலாளர் பாலசுப்பிரமணியன் , காரைக்குடி மண்டல மேலாளர் தாமோதரன் , திருநெல்வேலி மண்டல மேலாளர் . Jayapandiayan மற்றும் வங்கி அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் உள்ள 1000க்கும் மேற்பட்ட மகளிர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment