சோழவந்தான் அருகே, மேலக்காலில் இரவு முழுவதும் தொடரும் மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதி...
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட மேலக்கால் கிராமத்தில் தொடர்ந்து, இரண்டாவது நாளாக இரவு முழுவதும் மின்தடை ஏற்படுவதால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மின்தடைக்கான காரணம் முன் அறிவிப்பு மூலம் தெரிவிப்பதில்லை
எப்போதும், மின்சாரம் வரும் என்று கேட்பதற்காகபலமுறை தொடர்பு கொண்டும் போனை எடுக்காத மின்சாரத்துறைஅதிகாரிகளால் பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில் மேலக்கால் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பகல் மற்றும் இரவு முழுவதும் மின்தடை ஏற்படுவதுடன் மின்சாரம் எப்போது வரும் என்றும் தெரியவில்லை.
இது குறித்து , அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அதிகாரிகள் போனை எடுப்பதில்லை என்றும் தொடர்ந்து பிஸியாகவே உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
வீடுகளில், அன்றைய காலகட்டத்தில் மின்சார விளக்குகள் மற்றும் பயன்படுத்துவதற்கு மின்சாரம் தேவைப்பட்டது. தற்போது, பேன்,மிக்ஸி, கிரைண்டர்,வாஷிங் மெஷின், பிரிட்ஜ், ஏர் கூலர்,ஏசி,அயன் பாக்ஸ், ரைஸ்குக்கர், ஹீட்டர், வாட்டர்பில்டர் உள்பட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் மின்சாரத்தின் மூலமாக பயன்படுத்தப்படுகிறது. எல்லாமே மின்சாரம் மையமாகிவிட்டதால், மின்சாரம் இல்லை என்றால் அன்றாட வாழ்க்கையில் பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், தொடர்ந்து மின்சாரம் தடை ஏற்படுவதால் கிராம மக்கள் பெரிதும் சிரமப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
அதிகாரிகளின் இது போன்ற செயல்களால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுவதாகவும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ,கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோடை வெப்பம் உச்சத்தில் இருந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக மழை பெய்து வருவதால் வெப்பம் தனிந்து சிறிது குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இருந்தாலும், இரவு நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதனால் பொதுமக்கள் மின்சாரம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
No comments:
Post a Comment