திருமங்கலம் பிரம்ம குமாரிகள் தியான மையத்தில் கோடைகால ஆன்மீக பயிற்சி அன்னை பாத்திமா கல்லூரி முதல்வர் பரிசுகளை வழங்கினார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 12 May 2024

திருமங்கலம் பிரம்ம குமாரிகள் தியான மையத்தில் கோடைகால ஆன்மீக பயிற்சி அன்னை பாத்திமா கல்லூரி முதல்வர் பரிசுகளை வழங்கினார்.

 


திருமங்கலம் பிரம்ம குமாரிகள் தியான மையத்தில் கோடைகால ஆன்மீக பயிற்சி அன்னை பாத்திமா கல்லூரி முதல்வர் பரிசுகளை வழங்கினார்.


மதுரை மாவட்டம்  திருமங்கலத்தில் அமைந்துள்ள பிரம்மகுமாரிகள் ராஜ யோக தியான மையத்தில் மாணவ மாணவியர்களுக்கு 'சிவனும் நானும்' என்ற தலைப்பில் கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டது. போட்டிகளில் வென்ற மாணவ-மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி  இம்மையத்தின் தலைமை சகோதரி புனிதா தலைமையில் நடைபெற்றது. அவர் தனது தலைமையுரையில், உலகில் வாழும் அனைத்து மக்கள் மீதும் அன்பு செலுத்த ஆன்மீக பயிற்சி அவசியம் எனவும், தியானத்தின் பயன்களையும் விளக்கிக் கூறினார்.



சிறப்பு விருந்தினராக அன்னை பாத்திமா கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றுகையில், இது போன்ற ஆன்மீக பயிற்சி  நமது மனதை  கட்டுப்படுத்தும் ஆற்றலை வளர்க்கும் எனவும், அனைத்து மதமும் பிறரை நேசிக்கவும் மதிக்கவும் போதிக்கிறது எனவும், கல்வி அறிவும் திறனும் ஒருங்கே அமையப்பெற்றால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் எனவும், பெற்றோர்களைப் போல பிள்ளைகளின் நலம் நாடுபவர்கள் வேறு எவரும் இயக்க முடியாது என்பதால், பிள்ளைகள் பெற்றோர்களை மதித்து அவர்களின் சொல்படி செயலாற்ற வேண்டும் எனவும் அறிவுரை கூறினார்.



முன்னதாக, தங்கப்பாண்டி வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். மாணவி சந்தியா பரதநாட்டியம் ஆடினார். போட்டிகளில் வென்ற குயின் மீரா பள்ளி மாணவர் ஹர்சன், கிருஷ்ணன் கோவில் லிங்கா குளோபல் பள்ளி மாணவிகள்  சுனந்தா, தீக்ஷிதா, பி.கே. என். பள்ளி டெனிசன், தென்றல் பள்ளி பிரதீப் குமார், குளோபல் எட்ஜ் பள்ளி ஹனுமாருதி உள்ளிட்டோருக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை பி. கே. என். மகளிர் பள்ளி தலைமை ஆசிரியை குருவம்மாள் தொகுத்து வழங்கினார்.



மாலையில் நடந்த விளையாட்டு நிகழ்ச்சிகளை திருமங்கலம் லயன்ஸ் கிளப் உதவி தலைவர் பாலமோகன் துவக்கி வைத்தார். விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ- மாணவியர்களுக்கும் பென்சில் மற்றும் பவுச்கள் வழங்கப்பட்டது. அன்னை பாத்திமா கல்லூரி பேராசிரியரும், தியான மைய உறுப்பினருமான செந்தில், உடற்கல்வி இயக்குனர் நாராயண பிரபு உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இறுதியில் வந்திருந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தியான மைய சகோதரிகள் புனிதா, சரோஜினி ஆகியோர் தலைமையில் மைய உறுப்பினர்கள் செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad