சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளத்தில் இலவச இதய மருத்துவ முகாம்:
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளி பள்ளம் வி கிளினிக் மற்றும் வி.சினிமா திரையரங்கு வளாகத்தில் மதுரை சர்வேயர் காலனி தேவதாஸ் மருத்துவமனை எமர்ஜென்சி கேர் எக்ஸ்பர்ட் மற்றும் கிளினிக் இணைந்து நடத்திய இலவச இதய மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், ரத்த அழுத்தம் ,நீரழிவு நோய், இஜிசி, எக்கோ பரிசோதனை செய்தல் மற்றும் இதய நோய்க்கான இலவச ஆலோசனைகள் வழங்கப்பட்டது. சுமார் 4000 ரூபாய் மதிப்புள்ள ,இதய நோய்கள் கண் பரிசோதனைகள் இலவசமாக பார்க்கப்பட்டது. தேவதாஸ் மருத்துவமனையின் இதய நோய்க்கான மருத்துவர் நிஜாமுதீன் தலைமையிலான மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனைகள் செய்து ஆலோசனைகள் வழங்கினர். மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை, வி.கிளினிக் டாக்டர் செந்தில் செய்திருந்தார்.
இந்த முகாமில், முள்ளிப்பள்ளம் தென்கரை சோழவந்தான் மன்னாடிமங்கலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனைகள் செய்து பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment