அலங்காநல்லூர் பாலமேடு சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை வீசி வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே மழை பெய்வதால், பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர் .
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பாலமேடு பகுதிகளில் சூறைக்காற்றுடன் அரை மணி நேரத்திற்கும் மேலாகபலத்த மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாய பகுதிகள் நிறைந்த இந்த பகுதிகளில் பப்பாளி வாழை, முருங்கை கொய்யா மா பழங்கள் போன்றவைகள் அதிகம் பயிரிட்டுள்ளனர். தற்போது, பெய்து வரும் இந்த மழை காரணமாக விவசாய பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment