நீதிபதியின்நூல் வெளியீட்டு விழா:
மதுரை வடக்கு மாசி வீதி மணியம் மை மழலையர் பள்ளியில், ஓய்வு பெற்ற நீதிபதி நடராசனின் இதயத்தில் நிலைத்து நிற்கும் இனிய நினைவுகள் நூல் வெளியீட்டு விழா நடந்தது.
இந்த விழாவிற்கு, பள்ளித்தாளாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற நீதிபதி அய்யாசாமி, ஓய்வு பெற்ற அரசு வழக்கறிஞர் ஜானகி ராமுலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அரசு தொழில் பயிற்சி நிலைய உதவி பயிற்சி அலுவலர் வள்ளுவன் வரவேற்றார்.
இந்த விழாவில், முன்னாள் மாவட்ட நீதிபதி பொன்னுச்சாமி நூலை, வெளியிட அதை, மூத்த வழக்கறிஞர் டி.கே.கோபாலன் பெற்றுக் கொண்டார். நூலாசிரியர் நடராஜன் ஏற்புரையாற்றினார். முடிவில், மதுரை கிளை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இளங்கோவன் நன்றி கூறினார். நிகழ்ச்சியினை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ்மணி தொகுத்து வழங்கினார்.
No comments:
Post a Comment