அதிமுக ஆட்சியின் போது ஐந்து முறை உணவு உற்பத்தியில் மத்திய அரசு விருதை பெற முடிந்தது. ஆனால் இந்த ஆட்சி வந்த பிறகு எந்தவித சாதனையும் இன்றி வேதனை மிஞ்சியிருப்பதை தான் பார்க்க முடிகிறது. -முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 17 May 2024

அதிமுக ஆட்சியின் போது ஐந்து முறை உணவு உற்பத்தியில் மத்திய அரசு விருதை பெற முடிந்தது. ஆனால் இந்த ஆட்சி வந்த பிறகு எந்தவித சாதனையும் இன்றி வேதனை மிஞ்சியிருப்பதை தான் பார்க்க முடிகிறது. -முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி


அதிமுக ஆட்சியின் போது ஐந்து முறை உணவு உற்பத்தியில் மத்திய அரசு விருதை பெற முடிந்தது. ஆனால் இந்த ஆட்சி வந்த பிறகு எந்தவித சாதனையும் இன்றி வேதனை மிஞ்சியிருப்பதை தான் பார்க்க முடிகிறது. -முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி


திருமங்கலம் தொகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னால் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில்:

இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக இந்த மாலை நமது அண்டை மாநிலங்களில் பெய்தாலும் உபரி நீர் நமக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அதற்கு நீர் நிலைகளை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி தயாராக நாம் வைத்திருந்தால் அந்த நீரை நாம் சேமிக்க முடியும். ஏற்கனவே பெய்த வடகிழக்கு பருவமழையில் வந்த நீரை நம் முழுமையாக சேமித்து வைக்காததால் 22 மாவட்டங்களில் வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த அரசு தமிழக ஜீவாதார உரிமையை காவு கொடுப்பதோடு நீர் மேலாண்மையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக தான் நேற்று நடைபெற்ற காவிரி ஆணைய கூட்டம். நேரிலே கலந்து கொண்டு உச்ச நீதிமன்றத்தின் மூலம் நமது உரிமையை நிலைநாட்டுகின்ற போது கூட அவர்கள் நமது உரிமையை பறிக்கின்ற செயலை செய்கிறார்கள். மேகதாது அணையை அவர்கள் கட்டுவதாக சொல்கின்ற கூட்டத்தில் கூட பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிறது. இயற்கையின் மூலம் கிடைக்கின்ற நீரை பராமரிக்கின்ற திட்டத்தில் இந்த அரசு தவறிவிட்டது. அதிமுக ஆட்சியின் போது ஐந்து முறை உணவு உற்பத்தியில் மத்திய அரசு விருதை பெற முடிந்தது. ஆனால் இந்த ஆட்சி வந்த பிறகு எந்தவித சாதனையும் இன்றி வேதனை மிஞ்சியிருப்பதை தான் பார்க்க முடிகிறது. வெப்பச் சலனத்தின் போது எடுக்கின்ற முடிவை கோடை மழையின் போது எடுக்கின்றார்கள். நாங்கள் சுட்டிக் காட்டிய பிறகு அதை வாபஸ் பெற்று மறு அறிவிப்பை வெளியிடுகிறார்கள். இதுபோன்று காலம் தாழ்த்தி இந்த அரசு செயல்படுவதால் தான் காலாவதியான பேருந்துகளாக உள்ளது அதை திமுகவினர் ஸ்டாலின் பேருந்து என்று அழைக்கிறார்கள். அவற்றை முறையாக பழுது பார்க்காததால் தற்போது உயிரிழப்புகள் போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது.

திமுக ஆட்சி குறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் கூறியது குறித்த கேள்விக்கு:

தற்போது உள்ள தலைவர் செல்வப் பெருந்தகை நாங்கள் ஆட்சி அமைப்போம், எத்தனை நாளைக்கு நாங்கள் சீட்டுக்காக பிச்சை எடுப்பது என்று பேசி உள்ளார். ஆனால் முன்னாள் தலைவர் இப்படி பேசியுள்ளார், அவர்களுக்குள் என்ன உள்குத்து, வெளிகுத்து உள்ளது என்று தெரியவில்லை. அது அவர்கள் பிரச்சனையை அவர்கள் தான் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

தமிழக அரசின் போதை ஒழிப்பு நடவடிக்கை குறித்த கேள்விக்கு:

ஏற்கனவே பல கூட்டங்கள் நடத்தி கஞ்சாவை ஒழிப்பதற்காக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்கள்.  ஆனால் அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. போதைப் பொருள் என்கிற காட்டுத்தீ தமிழகத்தில் எங்கும் பரவி பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நாட்டை வழிநடத்த வேண்டிய இளைய சமுதாயம் போதைக்கு அடிமையாகி அடிமைப்பட்டுள்ள சமுதாயமாகத்தான் உள்ளது. இரும்பு கரம் கொண்டு அடக்கினால் தான் இந்த போதைப் பழக்கம் என்கிற காட்டுத்தீயை முழுமையாக அணைக்க முடியும். அப்படி இல்லாமல் மயிலிறகு மூலம் தடவிக் கொடுத்து இதை திசை திருப்புகிற முயற்சி எள் முனை அளவும் இந்த போதை கலாச்சாரத்தை தடுத்து நிறுத்த முடியாது என்பது நிதர்சனமான உண்மை என கூறினார்.


செய்தியாளர் R. வினோத் பாபு

No comments:

Post a Comment

Post Top Ad