பரவை காய்கறி சந்தையில் வியாபாரி வெட்டி படுகொலை - முன்பகை காரணமாக என போலீசார் விசாரணை..
மதுரை மிகப்பெரிய காய்கறி சந்தையாக செயல்படும் பரவை காய்கறி சந்தையில் வெளி மாநில, வெளி மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த பரவை காய்கறி சந்தையில் இருந்துதான் மதுரையில் உள்ள பல்வேறு உழவர் சந்தைகளுக்கு காய்கறிகள் அனுப்பப்பட்ட வருகிறது.
இந்த நிலையில் மதுரையை பரவை காய்கறி சந்தையில் முட்டைகோஸ் வியாபாரியான மதுரை சம்பட்டிபுரம் பகுதியில் சேர்ந்த கோபால் என்பவரை இன்று அதிகாலை காய்கறி சந்தைக்குப் பின்புறம் உள்ள காலியிடத்தில் மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த கூடல் புதூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன் விரோத காரணமாக கொலை செய்தாரா அல்லது வியாபாரம் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸ்சார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment