மாவட்ட ஆட்சியர் தலைமையில் பள்ளி செல்லா குழந்தைகளுக்கான மூன்று அடுக்கு குழு கூட்டம் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 2 May 2024

மாவட்ட ஆட்சியர் தலைமையில் பள்ளி செல்லா குழந்தைகளுக்கான மூன்று அடுக்கு குழு கூட்டம்

 


மாவட்ட ஆட்சியர் தலைமையில் பள்ளி செல்லா குழந்தைகளுக்கான மூன்று அடுக்கு குழு கூட்டம் பள்ளி மேலாண்மை குழு மற்றும் புதிய பாரத எழுத்தறிவு இயக்க கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. பள்ளி செல்லாமல் இடை நின்ற மாணவர்களை பள்ளிக்கு வருகை புரிய செய்ய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் அதில் வருவாய் கோட்டாட்சியர்கள் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் இணைந்து பள்ளி செல்லாமல் உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிய செய்ய வேண்டும். வரும் கல்வி ஆண்டு முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள வேண்டும்  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருப்பமான தொழிற்கல்வி பயில விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மேலும் மதுரை மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் யாரும் இல்லை என்ற நிலையை அடைவதற்கு தொடர் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பள்ளிக்குத் தேவையான வசதிகளை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றி தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் அனுப்பிட வேண்டும். புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் வரும் கல்வி ஆண்டுக்கான கணக்கெடுப்பு பணியினை தன்னார்வலர்கள் உதவியுடன் மேற்கொள்ள வேண்டும் இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  சக்திவேல் மதுரை வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி மேலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயந்தி முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா உட்பட அனைத்து துறை அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் வட்டார கல்வி அலுவலர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad