காய்கறி வணிக வளாக வியாபாரிகள் நலச்சங்க பொதுக் குழு:
ஒருங்கிணைந்த காய்கனி வணிக வளாக வியாபாரிகள் நலச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் ஒருங்கிணைந்த காய்கனி வணிக வளாக வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில், பொதுக்குழு கூட்டம், மதுரை அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் நீலகண்டன் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக பழனிச்சாமி மற்றும் தக்காளி காய்கனி அழகும் பொருள் மாத வாடகை வியாபாரிகள் பொதுநலச் சங்கத்தலைவர் சேகர் பங்கேற்றனர்.
மேலும், துணைத் தலைவர்கள் மீனாட்சி சுந்தரம், முகமது ரியாஸ், விவேகானந்தன், பிரகாஷ், துணைச் செயலாளர்கள் சுரேஷ், அப்துல் ரகுமான், முருகன், பாஸ்கரன், ஆசிர்வாதம், ராஜ்குமார் மற்றும் வங்கி மேலாளர் மதன்குமார் செல்வம் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில், சங்கத்தின் ஆலோசகர் புஷ்பராஜன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment