பத்ரகாளியம்மன் ஆலய விழா, முளைப்பாரி ஊர்வலம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday 25 May 2024

பத்ரகாளியம்மன் ஆலய விழா, முளைப்பாரி ஊர்வலம்.

 


பத்ரகாளியம்மன் ஆலய விழா, முளைப்பாரி ஊர்வலம்.


மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் புகழ்பெற்ற பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.


மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட மேலப்புதூரில் அமைந்துள்ளது நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட புகழ்பெற்ற பத்திரகாளியம்மன் கோவில். இந்த கோவிலின் வைகாசி பொங்கல் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டும் இந்த வைகாசி பொங்கல் திருவிழா நேற்று முதல் துவங்கி 5 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.


இத்திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வான இன்று ஏராளமான பக்தர்கள் ஆயிரத்திற்கும் அதிகமான முளைப்பாரிகளை எடுத்து வந்து உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளான மதுரை ரோடு, தேனி ரோடு வழியாக ஊர்வலமாக வந்து கோவிலுக்கு வந்தடைந்தனர். தொடர்ந்து, பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்ட நிலையில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad