சுபிக்சம் சிறப்பு மருத்துவமனை சார்பில், முதுமை தடுப்பு விழிப்புணர்வு மருத்துவ முகாம்:
மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே உள்ள காசிம் ரெசிடென்ட்சி குடியிருப்பு பகுதியில், சுபிக்சம் சிறப்பு மருத்துவமனை சார்பில், முதுமை தடுப்பு விழிப்புணர்வு மருத்துவ முகாம் பொதுமக்களுக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில், சுபிக்சம் சிறப்பு மருத்துவமனையின் நிறுவனரும் பெண்கள் நல மருத்துவருமான இராஜேஸ்வரி பாலமுருகன் தலைமை தாங்கினார்.
இம்முகாமினை, காசிம் ரெசிடென்சி குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் சரவணன் மற்றும் செயலாளர் சாம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், வாலிபத்தை கூட்டும் மருத்துவ முகாமிற்கான அடிப்படை உடல்நல அலகுகள், முழு உடல் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில், தலை முதல் கால் வரை பகுதிகளில் நுணுக்கமாக பரிசோதனைகள் மருத்துவர்கள் செய்தனர் மேலும், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் மக்களுக்கு வழங்கப்பட்டது.
இதில், பெண்களைப் பரிசோதிப்பதற்கென பெண் மருத்துவர்கள் பிரத்யேகமாக முகாமில் கலந்துகொண்டு தங்கள் பங்களிப்பை வழங்கினர். 40 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஆண்-பெண் இருபாலருக்கும் இரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. மேல் சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு தகுந்த மருத்துவமனைக்கு உரியமுறையில் பரிந்துரைக்கப்பட்டது. காலை 9 மணி முதல் துவங்கி மதியம் 2 மணிவரை மருத்துவ முகாம் சிறப்புற நிகழ்ந்தது. முகாமில், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment