தமிழகத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 12/11 கீழ் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 27 May 2024

தமிழகத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 12/11 கீழ் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு

 


தமிழகத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 12/11 கீழ் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் எல்கேஜி, 1ம் வகுப்பு குறைந்தபட்சம் 25% விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிடும் பொருட்டு தகுதியுள்ள 382 பள்ளிகளுக்கு 25 சதவீத விழுக்காடு இட ஒதுக்கீடு படி 4044 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேற்படி தகுதியுள்ள இடங்களுக்கு பெற்றோர்களிடம் இருந்து இணையதளம் மூலம் 22.4.2024 முதல் 20.5.2024 முடிய 8,591 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதன் ஆவணங்கள் மற்றும் விதிகளின்படி சரிபார்க்கப்பட்டது. 



7913 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டும் 99 விண்ணப்பங்கள் தகுதியற்றவை எனவும் 579 நபர்கள் விண்ணப்பங்களில் உரிய ஆவணம் இல்லை என முடிவு செய்யப்பட்டு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நிர்ணயம் என முடிவு செய்யப்பட்டு இடத்தினை விட கூடுதலாக விண்ணப்பங்கள் இருக்கும் பட்சத்தில் குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்படும் பணி நாளை 28.5.2024 காலை 09.30மணி அளவில் தொடங்கி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. 



இப்பணிக்கான அரசு பார்வையாளர்களாக அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலர்கள் ஆசிரியர் பயிற்சி பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 352 பேர்கள் நியமனம் செய்யப்பட்டு இவர்களுக்கான ஆய்வுக்கூடம் 27.5.2024 மாலை இரண்டு மணி அளவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நடைபெற்றது. மேற்படி அரசு பார்வையாளர்கள் முன்னிலையில் ஒளிவு மறைவு இன்றி குழுக்கள் முறையில் நடைபெறும் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பெயர் பட்டியல் மற்றும் காத்திருப்போர் பட்டியல் ஆகியவை 29.5.2024 அன்று பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். இப்பணி  எவ்விதமான புகாருக்கும் இடமளிக்காமல் வெளிப்படை தன்மையுடன் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் தலைமையில் நடைபெறும்.


செய்தியாளர்
R. வினோத் பாபு

No comments:

Post a Comment

Post Top Ad