தொழில் நுட்ப கோளாறு காரணமாக துபாயில் இருந்து மதுரை வரும் ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து - 168 கும் மேற்பட்ட பயணிகள் அவதி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 26 May 2024

தொழில் நுட்ப கோளாறு காரணமாக துபாயில் இருந்து மதுரை வரும் ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து - 168 கும் மேற்பட்ட பயணிகள் அவதி.


தொழில் நுட்ப கோளாறு  காரணமாக   துபாயில் இருந்து மதுரை  வரும் ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து - 168 கும் மேற்பட்ட பயணிகள் அவதி.



மதுரை விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட்  ஊழியர்களிடம்  துபாய் செல்லும் பயணிகள் வாக்குவாதம்



துபாயில் இருந்து மதுரை வரும்  ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் தினமும் விமான சேவை வழங்கி வருகிறது.


தினமும் காலை 7.40 மணி அளவில் துபாயில் இருந்து கிளம்பி 10 .40 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தடையும் .


பின்னர் மதுரையில் இருந்து 12 மணியளவில் துபாய் புறப்பட்டு செல்லும்.


இந்நிலையில் துபாயிலிருந்து 172 பயணிகளுடன் புறப்பட வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை துபாய் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது .


பயணிகளுக்கான மாற்று ஏற்பாடுகளை செய்யும் வரை விமான பயணம் ரத்து செய்யப்படுவதாக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.


மதுரையில் இருந்து 12.00 மணிக்கு துபாய் செல்வதற்காக 168 பயணிகளுடன் புறப்பட வேண்டிய  விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம்  அறிவித்துள்ளது.


ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் துபாய் விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக துபாயில் ரத்து செய்யப்பட்டது.


மதுரையிலிருந்து துபாய் புறப்பட வேண்டிய பயணிகள் இன்று காலை குடியேற்றத்துறை அதிகாரிகள்  சோதனைக்கு செல்ல தயாரான நிலையில் ஸ்பைஸ் ஜெட் விமானம் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தனர்


இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் விமான நிலைய வளாகத்தில் உள்ள ஸ்பைஸ் ஜெட் அலுவலக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


168 பயணிகள் துபாய் செல்ல தயாரன நிலையில் விமானம்  ரத்து செய்யப்பட்டதால் அதிர்ச்சியடைந்தனர்.


ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக  அறிவித்துள்ளதால் பயணிகள் மிகுந்த அவதி அடைந்தனர்.



ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பயணிகளின் வாக்குவாதத்தினால் பயணிகளின் பயண திட்டத்தை நாளை அல்லது நாளை மறுநாள் மாற்றம் செய்து தருவதாக அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad