போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 1300 காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுலை 30ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு சங்கம் அறிவிப்பு - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 18 May 2024

போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 1300 காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுலை 30ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு சங்கம் அறிவிப்பு


போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 1300 காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுலை 30ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு சங்கம் அறிவிப்பு




மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் வைத்து தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு சங்கம் சார்பில் சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் தலைமையில்
மாநில நிர்வாகிகள் கூட்டம்  நடை பெற்றது.




மாநிலத்தலைவர் விஜயகுருசாமி, மாநில பொதுசெயலாளர் கோபி ராஜன், பொருளாளர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 1300 காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்



32 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. அந்தந்த அலுவலகங்களில் பணியில் உள்ள நேர்முக உதவியாளர்களை பொறுப்பதிகாரியாக நியமிக்க வேண்டும்



வட்டாரப் போக்குவரத்து அலுவலக பணியாளர்களில் ஐந்தில் ஒரு பங்கு பணியிடம் அமைச்சுப் பணியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்ய ஏற்கனவே ஆணை பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.  அந்த ஒதுக்கீட்டு அரசு ஆணையை இந்த அரசு உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்
மாநில எல்லையில் உள்ள 21 போக்குவரத்து துறை சோதனை சாவடிகளை மூடப்போவதாக தெரிய வருகிறது  சோதனை சாவடிகளை மூடக்கூடாது



என்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுன் 6 -ல் கோவை சென்னை சேலம் வேலூர் மதுரை நெல்லை திருச்சி ஆகிய ஏழு மையங்களில் மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றும், 30- 6 -2024 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது எனவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அதன் சிறப்பு தலைவர் கு.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad